தமிழ்ப் புனைவுகளில் சுற்றுச்சூழல் ஓர்மை

Courtesy: Galya Popova
ஒரு இலக்கியப் படைப்பு பல்வேறு அக்கறைகளையும் கவனங்களையும் உள்ளடக்கியதாக இருக்கலாம். எந்தப் பிரச்சினையை வேண்டுமானாலும் கையாளலாம். எத்தகைய வாழ்நிலையையும் சூழ்நிலையையும் பிரதிபலிக்கலாம். எப்படிப்பட்ட சிந்தனையையும் உணர்வையும் வெளிப்படுத்தலாம். இந்த அக்கறைகள், சிந்தனைகள், பிரச்சினைகள், வாழ்நிலை யதார்த்தங்கள் முதலானவை மிக அரியவையாகவும் இருக்கலாம். ஆனால் படைப்பைப் பொறுத்தவரை இவற்றில் எந்த ஒன்றுக்கும் பிரதான மதிப்பு இருக்க முடியாது. ஒரு புனைவுப் பிரதி எதைத் தன் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது என்பதில் அல்ல; எத்தகைய உள்ளடக்கமாக இருந்தாலும் அது படைப்பாக உருப்பெறுகிறதா என்பதை வைத்துத்தான் அது படைப்பாக மதிப்புப் பெறும். மிக உன்னதமான சிந்தனைகளையோ, மிகவும் நேர்மையான அக்கறைகளையோ கொண்டிருப்பதாலேயே ஒரு பிரதி படைப்பாக உருப்பெற்றுவிடுவதில்லை. அந்
