விருதுகள் வாழ்த்துகள்

தனித்துவமான படைப்புகளால் உலகின் கவனத்தைத் தொடர்ந்து ஈர்த்துவரும் பெருமாள்முருகனுக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மலையாளக் கல்வியாளரும் எழுத்தாளருமான சுகுமார் அழிக்கோடு-இன் நூற்றாண்டு நினைவு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மறைந்த கல்வியாளர் மான் பகதூர் சிங் கேக்கின் நினைவைப் போற்றும் வகைமையிலமைந்த விருது இந்திய மொழிகளுக்கு இடையில் ஒற்றுமை பேணும் படைப்பாளியாகத் தேர்ந்தெடுத்து அளிக்கப்பட்டது.
•

எழுத்தாளர் ஷோபாசக்தியின் ‘ஸலாம் அலைக்’ நாவலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்புக்கு பிரான்சின் புகழ்பெற்ற ‘பிரி எமி நேக் கெமே’ - சர்வதேச விருது அளிக்கப்பட்டுள்ளது.
விருதுபெற்ற பெருமாள்முருகன், ஷோபாசக்தி இருவருக்கும் காலச்சுவடின் வாழ்த்துகள்.
