‘அக்கா, அங்க பாரு’

ஓவியம்: மு. மகேஷ்
அதிகாரம் 1
லதா தூக்கக் கலக்கத்தில் கண்களைக் கசக்கியபடிதான் படுத்திருந்த கிழிந்த பாயில் எழுந்தமர்ந்தாள். இன்னும் முழுவதுமாக விடியவில்லை. பக்கத்துப் பாயில் சுருண்டு கிடந்த மலரை அந்த அரையிருளின் மசமசத்த இருளில் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த ஓலைக் கொட்டகைக்கு வெளியே பட்டியில் அடைக்கப்பட்ட நூறு ஆடுகளும் மெதுவாகச் சத்தம் போடத் தொடங்கின. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவை பெரிதாகச் சத்தமிடத் தொடங்கிவிடும். சற்றுத் தள்ளியிருக்கும் பெரிய வீட்டு எஜமானியின் காதுகளில் அந்தச் சத்தம் விழுவதற்குள் லதா அவற்றை மேய்ச்சலுக்குப் பத்திக்கொண்டு போக வேண்டும். இல்லையென்றால் லதாவுக்கும் மலருக்கும் கடுமையான திட்டு கிடைக்கும். அத்தோடு கொடுக்கும் இரண்டு வ
