ஜூலை 2026
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
ஜூலை 2026
    • கட்டுரை
      ஈரான் போர் நிறுத்தம் வென்றவர் யார்?
      மெதுவாக சுவாசிக்கும் இளவரசர் தீவுகள்
      247 தமிழ் எழுத்துக்களும் 2 ஆங்கில ஐயர்களும்
    • உரை
      தமிழ்ப் புனைவுகளில் சுற்றுச்சூழல் ஓர்மை
    • கதை
      தீ இனிது
      பாடிங்க்டன் கரடி
    • அஞ்சலி: மு. பரமசிவம் (1934 – 2026)
      பாட்டாளிப் படைப்பாளி
    • தொகுப்புரை
      கலையை எழுதுதல்
    • அஞ்சலி: பல்லடம் மாணிக்கம் (1936 - 2026)
      புத்தக மாணிக்கம்
    • விருதுகள்
      விருதுகள் வாழ்த்துகள்
    • பதிவு
      பயன்தெரி பனுவலாளர்
      ‘செந்தமிழ் பதிப்புச் செம்மல்’
    • திரை
      நீளிரா
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      சிறு தொழிற்கூடங்களில் நசுங்குபவர்களின் வாழ்க்கை
    • கவிதைகள்
      ப. நீலாராமன் கவிதைகள்
    • தலையங்கம்
      அதிகாரப் பகிர்வு, அறிவுப் பரவலாக்கம், சமூக நீதி
    • பத்தி இன்றும் என்றும் 3
      காந்தி குடும்பமும் பாஜகவின் ஆதிக்கமும்
    • பத்தி: மெய்யுரைப்பேன் மனமே!
      ‘அக்கா, அங்க பாரு’
    • அஞ்சலி: பாரதிராஜா (1941 - 2026)
      மேதைமைக்கு அருகில் சென்ற சாதனையாளர்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஜூலை 2026 பதிவு ‘செந்தமிழ் பதிப்புச் செம்மல்’

‘செந்தமிழ் பதிப்புச் செம்மல்’

பதிவு
தி.அ. ஸ்ரீனிவாஸன்

உ.வே.சா. வாழ்விலும் வளர்ச்சியிலும் திருவாவடுதுறை ஆதீனத்திற்குப் பெரும் பங்குண்டு. அவரது வாழ்க்கையின் முக்கியக் கட்டத்தில் அவரை அணைத்து ஆதரித்தது இந்த ஆதீனம். உ.வே.சா.வும் செய்நன்றி மறவாமல் தனது எழுத்துக்களில் ஆதீனத்தைப் பற்றி உள்ளன்போடு குறிப்பிட்டுள்ளார். இந்தத் தொடர்பைப் போற்றும் வகையில் திருவாவடுதுறை ஆதீனம் புதிதாக இந்த ஆண்டு உ.வே.சா.வின் பெயரால் ‘செந்தமிழ் பதிப்புச் செம்மல்’ என்ற விருதை ஏற்படுத்தியுள்ளது. இதன் முதல் விருது முனைவர் ப. சரவணனுக்கு வழங்கப்பட்டது.  திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் அவர்களின் ஜென்ம நட்சத்திரத் தின விழாவின்(8.6.2026) ஒரு பகுதியாக  ‘செந்தமிழ் பதிப்புச் செம்மல்’ விருது வழங்கும் நிகழ்ச்சியும், இதையொட்டி ‘தண்டமிழ்த் துறைசை ஆதீனமும் தமிழ்த் தாத்தாவும்’ என்ற தலைப்பில் ப. சரவணனின் உரையும் நிகழ்ந்தேறின.

ப. சரவணன் தனது நீண்ட உரையில், ‘மகாவித்வான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் அவர்கள் சரித்திரம்’, ‘என் சரித்திரம்’ போன்ற உ.வே.சா.வின் நூல்களிலும் அவரது பிற எழுத்துகளிலும் ஆதீனத்தோடு அவருக்கு இருந்த உறவு பற்றிய பகுதிகளைத் தொகுத்தளித்து, அந்த உறவின் ஆழத்தை அறியத் தந்தார். உ.வே.சா. வின் குடும்பப் பின்னணி, மகாவித்வானிடம் தமிழ் கற்கச் சென்றது, மாயூரத்தில் தங்கியது இவை  பற்றிய சுருக்கமான அறிமுகத்தை அளித்தார்; திருவாவடுதுறை  ஆதீனகர்த்தர் மேலகரம் சுப்பிரமணிய தேசிகரை முதல்முறையாக உ.வே.சா. சந்தித்ததையும் அவர் இவரைப் பரிசோதித்ததையும் விவரித்தார். இந்த முதல் சந்திப்பு அவர்கள் இருவருக்குமிடையேயான நீண்ட காலப் பிணைப்பிற்கு விதையூன்றியதைத் தெரிவித்தார். திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பாக உ.வே.சா. தனது 23ஆவது வயதில் பதிப்பித்த ‘சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்பும் வேணுவனலிங்கவிலாசச் சிறப்பும்’ என்ற நூல் பிற்காலத்தில் அவர் பல நூற்களைப் பதிப்பிப்பதற்குத் தூண்டுதலாக அமைந்ததையும் சரவணன் குறிப்பிட்டார்.

விருது வழங்கும் நிகழ்ச்சி ஆதீன நிறுவனர் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகள் சன்னதியின் முன் நடைபெற்றது. 24ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் ப. சரவணனுக்கு, ‘செந்தமிழ்ப் பதிப்புச் செம்மல்’ விருதையும் ரூபாய் ஐந்தாயிரத்திற்கான பொற்கிழியையும் வழங்கி, வெள்ளி உருத்திராக்க மாலையும் அணிவித்துக் கௌரவப்படுத்தினார்.

இந்த விருதோடு, ஆறுமுக நாவலரின் பெயரில் இவ்வாண்டு ஏற்படுத்தப்பட்டிருக்கும் ‘சைவநூல் பதிப்புச் சதுரர்’ விருது திருப்பரங்குன்றம் சிவதனுஷுக்கு இந்த விழாவில் வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சைவசமய ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

 - தி.அ.ஸ்ரீ.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.