ப. நீலாராமன் கவிதைகள்

ஓவியம்: எஸ்.இ. ஜெபா
கண்ணாடிக் கீறல்!
வெகுகாலமாய் அகத்திலூறிச்
சுழல்கின்ற சொல்லொன்றை
கொட்டிவிட்டுக் கரையேறினேன்...
விலா எலும்புகளில் நறுக்கென்று
குத்திக்கொண்டு வாதிட்டது
ஒரு தூண்டில் முள்...
அலைவுகளை விட்டுச் செல்வதை
விட தூக்கிச் செல்வது உத்தமம்
சாத்திரக் கோட்பாடுகளை
தோள்களில்
ஏற்றி இறக்கி
நைந்து போனது தசை...
ரசம் போன கண்ணாடிக்கு
கீறல் நினைவிலில்லை
கொட்டிக்கிடக்கும் ரகசியங்கள்
ஒன்றின் முனையில்
மற்றொன்றை வைத்தேன்...
முன்முனை அறுந்து
இன்னொரு முனையில்
பகுமானம் காட்டியது
ஒற்றைச் சோகச்சொல்லை
கீறிக்கொண்டிருந்தேன்...
துவை
