தலையங்கம்
ஆசிரியர் குழு

ஒரு சமூகத்தின் அரசியல், பொருளாதார விடுதலையைவிட அதன் பண்பாட்டு விடுதலை மிக முக்கியமானது. எல்லாருக்கும் எல்லாம் என்ற சமூக நீதிக் கோட்பாட்டைப் பொருளாதாரப் பங்கீடாக மட்டும் பார்க்காமல், அறிவுப் பங்கீடாகவும் பண்பாட்டு அதிகாரப் பரவலாக்கமாகவும் மாற்றியமைத்ததில் கடந்த திமுக அரசுக்கு முக்கிய இடமுண்டு. புத

கடிதங்கள்

100 அகவை கண்ட ‘புவியின் சாட்சி’யாகத் திகழும் டேவிட் அட்டன்பரோ பற்றிய கட்டுரையை சே.இரா. செல்வகுமரன் அருமையாகத் தொகுத்துள்ளார். வாழ்த்துக்கள். காந்தி படம் எடுத்து ஆஸ்கர் விருது பெற்று ரிச்சர்ட் அட்டன்பரோ இவரது மூத்த சகோதரர் என்ற தகவலையும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கே. வைத

கட்டுரை
மு. இராமனாதன்

கடந்த ஜூன் மாதம் 17ஆம் நாள், பாரிஸ் நகரையொட்டிய வெர்சாய்ஸ் மாளிகையில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கறுத்த மசியில் தடித்த எழுத்துக்களில் தனது ஒப்பத்தைப் பதிந்தார் அதிபர் டிரம்ப். 107 ஆண்டுகளுக்கு முன்பு, 1919இல், இதே மாளிகையில், இதே ஜூன் மாதத்தில் நிறைவேறிய ஒப்

கட்டுரை
ஸர்மிளா ஸெய்யித்

அடலார் தீவுக்கு (Princes’ Islands) செல்வதற்காக கபடாஷ் துறைமுகத்தில் நின்றபோது, நகரம் முழுவதுமாக விழித்திருக்கவில்லை. ஆனால் கடல் ஏற்கெனவே நாளைத் தொடங்கிவிட்டிருந்தது. வெள்ளை சீகல் பறவைகள் அமைதியான காலையில் சிறிய அசைவுகளை உருவாக்கிக் கப்பலின் மேலாக வட்டமிட்டுப் பறந்தன. இடுப்பு நெளிந்த கண்ணாடிக்

பத்தி இன்றும் என்றும் 3
ராமச்சந்திர குஹா; தமிழில்: மருதன்

ஓர் இளம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரை 2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு சந்திக்க நேர்ந்தது. ராகுல் காந்திக்கு ஐந்து அறிவுரைகள் கூற முடியுமா என்றார். பிரியங்கா காந்தி மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிடக் கூடாது. அதை மட்டும் செய்தால் போதும் என்றேன். ஆனால் அது நிச்சயம் புறக்கணிக்கப்படும் என

அஞ்சலி: பாரதிராஜா (1941 - 2026)
ஸ்டாலின் ராஜாங்கம்

கேமராவை ஸ்டூடியோக்களிலிருந்து வெளியே கொண்டுவந்தவர், கிராமப்புறங்களிலிருந்து பலர் திரைத்துறைக்கு வர உந்துதலாக இருந்தவர் போன்றவை பாரதிராஜா பற்றிய தேய்வழக்கான தகவல்கள். ஆனாலும் மாறிவிடாத உண்மைகள் என்றும் சில உண்டு. 1960, 1970களில் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் பல மாற்றங்கள் நடந்தன. கட்சிகளாலும் தலைவர்

அஞ்சலி: பல்லடம் மாணிக்கம் (1936 - 2026)
கண. குறிஞ்சி

நூல்களைத் தன் உயிரினும் மேலாக நேசித்த பல்லடம் மாணிக்கம் (1936-2026) அண்மையில் மறைவுற்றது துயர்மிகு செய்தியாகும்.கோவை மாவட்டம் பல்லடத்தில் எளிய உழவர் குடியில் பிறந்த மாணிக்கம், தன் குக்கிராமத்தில் பள்ளிக்கல்வியை முடித்த பின் 1954முதல் 1956வரை கோவை மாவட்டத்திலுள்ள பல்லடத்தில் நூலகராகப் பணியாற்றினார்.

அஞ்சலி: மு. பரமசிவம் (1934 – 2026)
ஆ.இரா. வேங்கடாசலபதி

திராவிட இயக்கம், இடதுசாரி இயக்கம் என அனைத்து முற்போக்கு இயக்கங்களாலும் வாழுங்காலத்தில் வஞ்சிக்கப்பட்ட இலக்கியவாதிகள் விந்தன் (1916-1975), தமிழ்ஒளி (1924-1965). இன்று இவர்களுடைய படைப்புகள் நாட்டுடைமையாகி, பல பதிப்பகங்கள் அவற்றை வெளியிட்டு வருகின்றன. நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் விந்தன், தமிழ்ஒளி

திரை
சொர்ணவேல்

சோமீதரன் சோமீதரனின் புனைவுப் படமான நீளிரா (2026), ஈழத்தமிழ் பார்வையிலிருந்து 1983-2009வரை நீண்ட இலங்கை உள்நாட்டு யுத்தத்தை ஆராயும் முதல் இந்தியத் தயாரிப்பு என்ற சிறப்பைப் பெறுகிறது. எனவே, அது வெறும் திரைப்படமாக மட்டும் வெளிவரவில்லை — அது ஒரு வலுவான பிரதிநிதித்துவ தலையீடு. தமிழ்த் தி

பத்தி: மெய்யுரைப்பேன் மனமே!
ரேவதி

ஓவியம்: மு. மகேஷ்  அதிகாரம் 1 லதா தூக்கக் கலக்கத்தில் கண்களைக் கசக்கியபடிதான் படுத்திருந்த கிழிந்த பாயில் எழுந்தமர்ந்தாள். இன்னும் முழுவதுமாக விடியவில்லை. பக்கத்துப் பாயில் சுருண்டு கிடந்த மலரை அந்த அரையிருளின் மசமசத்த இருளில் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த

கதை
பெருமாள்முருகன்

ஓவியம்: நரசிம்ம பாலாஜி   தீவைக்கக் குமரேசன் கிளம்பியபோது மூர்த்தியும் வந்து சேர்ந்துகொண்டான். மட்ட மத்தியான வெயில் தலை தீய்த்துக் கொளுத்தியது. பக்கத்து ஊரில் பெரிய காரியத்திற்குப் போக வேண்டியிருந்த அம்மாவுக்கு வெயில் உறைக்கவில்லை. ஊளையைச் சிந்திச் சிந்திப் போட்டுக் கட்டியழுவதில் ஆர

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா

அதிகாரம் 1 இந்த ஆங்கில ஐயர்கள் வேறு யாருமல்லர், தமிழர்களின் கலாச்சாரத் திருவுருக்கள். ஒருவர் ரோபர்ட் கொல்ட்வெல் (Robert Caldwell 1814-1891), மற்றவர் ஜி.யூ. போப் (G.U.Pope 1820-1908). முன்னையவர் ‘திராவிடம்’ என்ற கருத்தை வடிவமைத்து ஒரு அரசியல் இயக்கத்திற்கான அடித்தளத்தை அமைத்தவர். பின்ன

பதிவு
இஸ்க்ரா

2026 ஜூன் 4ஆம் தேதி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘மருதன்- 50’ நிகழ்வு எழுத்தாளர் மருதனைக் கொண்டாடும் விதமாக நடைபெற்றது. பொது வாசகர்களுக்கான குறிப்பிடத்தக்க வரலாற்று, அரசியல் புத்தகங்களை எழுதிக் குவித்த மருதனின் படைப்புலகம்சார் உரையமர்வும் கலந்துரையாடலும் இந்நிகழ்

உரை
அரவிந்தன்

Courtesy: Galya Popova ஒரு இலக்கியப் படைப்பு பல்வேறு அக்கறைகளையும் கவனங்களையும் உள்ளடக்கியதாக இருக்கலாம். எந்தப் பிரச்சினையை வேண்டுமானாலும் கையாளலாம். எத்தகைய வாழ்நிலையையும் சூழ்நிலையையும் பிரதிபலிக்கலாம். எப்படிப்பட்ட சிந்தனையையும் உணர்வையும் வெளிப்படுத்தலாம். இந்த அக்கறைகள், சிந்தனைகள், பிர

கதை
கோகுலக்கண்ணன்

ஓவியங்கள்: செல்வம்   லண்டனின் பாடிங்க்டன் ரயில் நிலையம் முன்னே நான் நின்றேன். என்னுடைய சிறு பெண் மட்டும் இதைப் பார்த்தால் துள்ளிக் குதித்திருப்பாள். அவளுக்கு  பாடிங்க்டன் கரடிக் கதை மனப்பாடம். ஆனாலும் அவள் இரவு தூங்குவதற்கு முன் அவளுக்கு பாடிங்க்டன் கரடிப் புத்தகத்திலிருந்த

கவிதைகள்
ப. நீலாராமன்

ஓவியம்: எஸ்.இ. ஜெபா   கண்ணாடிக் கீறல்! வெகுகாலமாய் அகத்திலூறிச் சுழல்கின்ற சொல்லொன்றை கொட்டிவிட்டுக் கரையேறினேன்... விலா எலும்புகளில் நறுக்கென்று குத்திக்கொண்டு வாதிட்டது ஒரு தூண்டில் முள்... அலைவுகளை விட்டுச் செல்வதை விட தூக்கிச் செல்வது உத்தமம் சாத்திரக் கோட்பாடுக

விருதுகள்

தனித்துவமான படைப்புகளால் உலகின் கவனத்தைத் தொடர்ந்து ஈர்த்துவரும் பெருமாள்முருகனுக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மலையாளக் கல்வியாளரும் எழுத்தாளருமான சுகுமார் அழிக்கோடு-இன் நூற்றாண்டு நினைவு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மறைந்த கல்வியாளர் மான் பகதூர் சிங் கேக்கின் நினைவைப் போற்றும் வகைம

தொகுப்புரை
எம். கோபாலகிருஷ்ணன்

2004ஆம் ஆண்டில் உயிர்மை இதழில் சுகுமாரனின் கட்டுரைகள் வெளியாகத் தொடங்கியபோதுதான் கவிஞராக  மட்டுமே அறியப்பட்டிருந்த அவரது எழுத்தின் வலுவான இன்னொரு பரிமாணம் வெளிப்படலானது. கூர்மையும் நுட்பமும் நளினமும் மிக்க மொழியும், மிகக் கச்சிதமாகக் கையாளப்பட்ட படிமங்களும் கொண்ட அவரது கவிதைகள் தந்திருந்த அதே ஈ

மதிப்புரை
ம. சோனியா

பட்டறை  (நாவல்) பரத்ராஜ் ரவிதாஸ்  வெளியீடு: பரிசல் 235, எம்.ஜி.ஆர் 1வது தெரு, எம்.எம்.டி.ஏ (MMDA) காலனி, அரும்பாக்கம், சென்னை-600106. பக். 262 ரூ. 300 நவீன இலக்கியத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி நாவலின் மூலமாகவே அறிய முடிகிறது. தமிழில் ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்கச் சில நாவல

பதிவு
தி.அ. ஸ்ரீனிவாஸன்

உ.வே.சா. வாழ்விலும் வளர்ச்சியிலும் திருவாவடுதுறை ஆதீனத்திற்குப் பெரும் பங்குண்டு. அவரது வாழ்க்கையின் முக்கியக் கட்டத்தில் அவரை அணைத்து ஆதரித்தது இந்த ஆதீனம். உ.வே.சா.வும் செய்நன்றி மறவாமல் தனது எழுத்துக்களில் ஆதீனத்தைப் பற்றி உள்ளன்போடு குறிப்பிட்டுள்ளார். இந்தத் தொடர்பைப் போற்றும் வகையில் திருவாவடு

உள்ளடக்கம்