ஈரான் போர் நிறுத்தம் வென்றவர் யார்?
கடந்த ஜூன் மாதம் 17ஆம் நாள், பாரிஸ் நகரையொட்டிய வெர்சாய்ஸ் மாளிகையில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கறுத்த மசியில் தடித்த எழுத்துக்களில் தனது ஒப்பத்தைப் பதிந்தார் அதிபர் டிரம்ப். 107 ஆண்டுகளுக்கு முன்பு, 1919இல், இதே மாளிகையில், இதே ஜூன் மாதத்தில் நிறைவேறிய ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அது முதலாம் உலகப் போரை (1914-18) முடிவுக்குக் கொணர்ந்தது. இரண்டு ஒப்பந்தங்களுக்கும் இடையே நூறாண்டு காலம் குறுக்கே கிடக்கிறது. பழைய ஒப்பந்தம் பல நாடுகளை உள்ளடக்கியது. புதிய ஒப்பந்தம், இரண்டு நாடுகளுக்கு இடையிலானது. அது முப்படைகளும் பொருதிய பாரம்பரியப் போர். இது வான்வழித் தாக்குதல்கள் மட்டுமே நடந்த ஏவுகணைப் போர். அது நெடும் போர். இது குறும் போர். இன்னும் இருக்கின்றன வேறுபாடுகள்.

இரண்டு ஒப்பந்தங்கள்
1919 ஒப்பந்தத்தின் போது, வெர்சாயிஸ் மா
