வார்ப்புகளுக்கு வெளியே

மராட்டியின் முதல் நாளித ழான தர்பண், 1832இல் பாளசாஸ்திரி ஜம்பேகர் என்பவரால் தொடங்கப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1840இல் அவரே திக்தர்ஷன் என்ற முதல் மாத இதழையும் தொடங்கினார். 1840 முதல் 1900 வரையிலான காலகட்டத்தில், இந்த இதழின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி 115 பருவ இதழ்கள் தொடங்கப்பட்டன. மேற்கத்தியக் கல்வியின் புதிய சிந்தனைகளைச் சாமானிய மக்களுக்கும் அவர்களின் தாய்மொழியிலேயே கொண்டுசேர்க்க வேண்டும் என்பதே அனைத்து இதழ்களின் நோக்கமாக இருந்தது. இவற்றில் சில இதழ்கள் குறுகிய காலத்திலேயே நின்றுபோனாலும், அப்போதிருந்து இரண்டாம் உலகப்போர் (1939) தொடங்கும் வரையிலான அந்த நூறாண்டுக் காலம், மராட்டிய இதழியலின் மாபெரும் பரிசோதனைக் காலமாக விளங்கியது. மதம், தார்மீகக் கடமை, தனிப்பட்ட ஆர்வம், இலக்கியச் சேவை போன்ற நோக்கங்களை மையமாகக் கொண்டே அக்காலகட்டத்தின் பெரும்பாலான இதழ்கள் தொடங்கப்பட்டன
