அகராதி நெறிகளுக்கு இடம் இல்லாத கையடக்க அகராதி

ஒப்பீடு
தமிழில் கையடக்கப் பதிப்பு என்று சொல்வதை ‘காம்பேக்ட்’ என்ற ஆங்கிலச் சொல்லாலேயே இந்தத் தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி சொல்கிறது. இடம்விட்டு இடம் கையில் எடுத்துச் செல்ல வசதியாகச் சிறிய வடிவத்தில் அச்சிடும் புத்தகமே கையடக்கப் பதிப்பு. 2020இல், விரிவாக்கித் திருத்திய மூன்றாவது பதிப்பாக (முதல் பதிப்பு 1992) வெளிவந்த, பெரிய அளவு தாளில் 1270 பக்கங்களைக் கொண்ட, க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதிக்கு (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) காலத்தால் பின் வந்த அகராதி இது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பது தவிர்க்க முடியாதது, இரண்டுக்கும் தனி உறவு இருப்பதாக அகராதியின் முன்னுரை சொல்லாவிட்டாலும் சொல் தேர்வுக்கும் பொருள் விளக்கத்துக்கும் தாய் அகராதிகள் என்று பட்டியலிடும் ஒன்பது அகராதிகளில் க்ரியா அகராதி ஒன்று. அவ்வளவே.
பலவகை அகராதிகள்</b
