மரபை மீறும் வேட்கை
புத்ததேப் பாசுவைப் பொறுத்தவரை (சாஹித்யா பத்ரோ/ தேஷ், மே 1953) ஷபூஜ் பத்ரோ (1914) என்ற பத்திரிகைதான் வங்காள மொழியின் முதல் சிறுபத்திரிகை. (சிட்டி பத்ரோ, ஐந்தாம் தொகுதி / 18ஆவது கடிதம் / விஷ்வ பாரதி), ரவீந்தரநாத் தாகூர் எடிட்டர் ப்ரொமொதோ சௌத்ரிக்கு எழுதிய கடிதத்தில், தாகூர் கனிஷ்ட என்று அப்பத்திரிகைக்குப் பெயர் சூட்டுமாறு பரிந்துரைத்தார். (கனிஷ்ட என்றால் ‘இளம்’ அல்லது ‘இளைய’ என்று பொருள்.) அவர் விரும்பிய பெயர் சூட்டப்படவில்லை என்றாலும் தாகூர் கற்பனைசெய்த உருவும் கருவும் அச்சிறுபத்திரிகையின் தன்மையை ஒத்திருந்தது.
ஷபூஜ் பத்ரோவைப் சிறுபத்திரிகை என்று பாசு குறிப்பிடுவதற்கான காரணங்களே சிறுபத்திரிகைகளின் குணாதிசயங்களாகவும் இருக்கின்றன. சமரசங்களுக்குட்படாத மரபுகளை மீறும் படைப்புகளைப் பதிப்பிக்கும் தளங்களாகச் சிறுபத்திரிகைகள் இருக்கின்றன. புதிய எழுத்தாளர்களைக் கண்டடைவதோடு, ஒத்த கருத்துடைய எழுத்தாளர்களைக் குழுவாக ஒருங்கிணைக்கும் செயலையும் சிறுபத்திரிகைகள் செய்கின்றன. (உதாரணத்திற்கு, ஷபூஜ் பத்ரோ மூலம் உருவான ஷபூஜ் சபாவைக் குறி
