ஒரு தலைவர், ஓர் அமைப்பு சில அதிகாரிகள்

இந்தியக் குடியரசைக் கட்டி யெழுப்பிய மகத்தான தலைவர்களின் 100ஆவது பிறந்த நாள் பொதுவெளியிலும் சமூக ஊடகங் களிலும் நினைவுகூரப்பட்டுக் கொண் டாடப்பட்டதைப் பார்த்தோம். அதே நேரம், முக்கியமான பங்களிப்புகளை நிகழ்த்திய பல தேசபக்தர்கள் போதுமான வெளிச்சம் கிடைக்காமல் இன்னமும் இருளில் மூழ்கிக்கிடக்கிறார்கள். ஹர் மந்தர் சிங் அவர்களுள் ஒருவர். 1926 ஜூலை 2இல் பிறந்த இவர் இந்திய எல்லைப்புற நிர்வாக சேவையின் (IFAS) தலைசிறந்த அதிகாரிகளில் ஒருவர். இந்தியாவைக் கட்டமைக்கும் அசாதாரணப் பரிசோதனையை மேற்கொண்ட ஓர் அமைப்பு ஐஎஃப்ஏஎஸ்.
நான் ஐஎஃப்ஏஎஸ் குறித்து முதலில் கேள்விப்பட்டது 1990களில். வெரியர் எல்வினை நான் ஆராய்ந்துகொண்டிருந்த காலம் அது. ஆங்கிலேயரான எல்வின் மத்திய இந்தியாவைச் சேர்ந்த பழங்குடிகளோடு 25 ஆண்டுகள் வாழ்ந்தவர், அவர்கள் குறித்து விரிவாக எழுதியவர். சுதந்திரத்துக்குப் பிறகு அவர் இந்தியக் குடியுர
