அருண்பாண்டியன் மனோகரன் கதைகள்

ஓவியம்: மு. மகேஷ்
மது விடுதி
இடைவிடாது மனிதர்களும் வாகனங்களும் ஓடிக்கொண்டி ருக்கும் நகரத்தின் மையச் சாலை யொன்றில்தான் அந்த மதுவிடுதி அமைந்திருந்தது. விடுதியின் மூலையில் இரண்டுபேர் மட்டும் அமரும் மேஜை ஒன்றின் முன் அமர்ந்து ஸ்காட்ச் விஸ்கியான சோல்டர் மங்கியை நிதானமாக அருந்திக் கொண்டிருந்த காவல் ஆய்வாளர் ராஜன், தனது பால்ய கால நண்பனும் காவல் கண்காணிப்பாளருமான அதிரூபனுக்காகக் காத்திருந்தார். இருவரும் காவலர்கள் என்றாலும் அடிக்கடி இப்படிச் சந்தித்துக் கொள்வதில்லை. ராஜன்தான் அதிரூபனைச் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்குக் காரணமில்லாமல் இல்லை. அதிரூபன் நேற்று நிகழ்த்திய போலி மோதல் அவருக்கு “டபுள் சூட்டர்” என்ற புதிய பெயரை வாங்கிக் கொடுத்திருந்தது. அந்தப் போலி மோதலை மக்கள் வெகுவா
