இந்தி இலக்கியத்தில் புத்தெழுச்சி
இந்தியாவின் எந்தவொரு மொழி யிலும், தீவிர இலக்கியத்தின் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள அந்த மொழியில் வெளியான சிற்றிதழ்களே உதவும். இந்தி இலக்கியமும் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்தியாவில் ‘சிற்றிதழ் இயக்கம்’ முதன்முதலில் வங்காளத்தில் தொடங்கியது. கலை, இலக்கியம் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் வங்காளம் எப்போதும் முன்னணியில் இருப்பது. பல்வேறு துறைகளிலும் மறுமலர்ச்சியின் தொடக்கம் வங்காளத்தில் அமைந்தது. சிற்றிதழ் இயக்கத்தின் தொடக்கமும் வங்காளத்திலேயே நிகழ்ந்தது. 1923ஆம் ஆண்டு வெளியான லோல் என்னும் இதழ் இந்தியாவில் வெளியான முதல் சிறுபத்திரிகை என்று கருதப்படுகிறது. வங்கத்தில் சிறுபத்திரிகை இயக்கத்தின் முன்னோடிகளாக மோஹித்லால் மஜும்தார் (1888-1952), காஜி நஸ்ருல் அஸ்லாம் (1899-1976), அசிந்திய குமார் சென்குப்தா (1882-1922) ஆகிய மூவர் கருதப்படுகின்றனர். கல்லோல் மூலமாக உருவான சிறுபத்திரிகை மரபு வங்காள இலக்கியத்தை மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற மொழிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றும் வங்காளத்தில் கணிசமான எண்ணிக்கையில் சிறுபத்திரிகைகள் வெளியாகின்றன.
1955முதல் 19
