புதிய பூக்கள் மலர்ந்தபோது...

மலையாளத்தின் சிற்றிதழ்களைக் குறித்துச் சிந்திக்கும்போது அய்யப்பப் பணிக்கரின் கவிதை வரியொன்று நினைவுக்கு வருகிறது.
“பூக்காமலிருக்க என்னால் ஆகாதே”
வரலாற்றின் கடப்பாடே இந்த வெளியீடுகள். அறுபதுகளோடு கேரளத்தின் கலை, பண்பாட்டுத் துறையில் நிகழ்ந்த மறுமலர்ச்சியின் உருவாக்கங்களில் ஒன்று சிற்றிதழ்கள். சினிமா, நாடகம், இலக்கியம், கலை முதலான எல்லாத் தளங்களிலும் நவீனத்துவத்தின் ஒளிக் கதிர்கள் படரத் தொடங்கியிருந்தன. நடைமுறையிலிருந்த அரசியல் சமூகச் சூழலை நிராகரித்தும் புதிய தேடல்களின் தொடக்கமாகவும் நவீனத்துவம் கடந்து வந்தது பொருட்படுத்தத் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தியது.
மலையாளத்துக்கு நீண்ட காலப் பத்திரிகை, ஊடக வரலாறு இருக்கிறது. தேசியப் போராட்டத்தில் பங்கேற்கவும் மலையாளப் பத்திரிகைகளால் முடிந்திருக்கிறது. ஐக்கிய கேரளப் பிறப்பிலும் நவீன கேரளத்தின் உருவாக்கத்திலும்
