“நம் கதையை நாம் சொல்லாவிட்டால் வேறொருவர் சொல்வார்”
தமிழ் சினிமாவின் வழக்கமான வார்ப்புகளி லிருந்து விலகி, தமிழ் இஸ்லாமியர்களின் அச லான அன்றாடத்தையும் பண்பாட்டு அசைவுகளை யும் திரையில் பதிவாக்கி யுள்ள ‘ஹபீபி’ திரைப்படத் தின் இயக்குநர் மீரா கதிரவனுடன் எழுத்தாளர் களந்தை பீர்முகம்மது மேற்கொண்ட சிறப்பு நேர்காணல் இது. கடந்த 17–07–2026 அன்று தொலைபேசி வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.
கேள்வி: தமிழ் சினிமாவின் வழக்கமான வார்ப்பு களிலிருந்து விலகி, தமிழ் இஸ்லாமியர்களின் அசல் அன்றாட வாழ்வையும் பண்பாட்டு அசைவுகளையும் ‘ஹபீபி’யில் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது?
மீரா கதிரவன்: முதன்மையாக இதன் காலச்சூழ்நிலையைச் சொல்லலாம். இப்படியொரு படம் செய்வதற்கான காலச்சூழ்நிலை இப்போதுதான் கனிந்துள்ளது. நம்மைச் சுற்றி இஸ்லாமிய வெறுப்புத் திரைப்படங்கள் நிறைய உருவாக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், மக்களிடம் இன்று ‘இந்திய தேசியப் பற்று’ என்பது ‘இந்து மனநிலை’ என்பதாகவும், அந்த இந்து மனநிலை இஸ்லாமியர்களை வ
