பிரிவினைவாதப் பயங்கரம்

வினாயக தாமோதர சாவர்க்கரும் மாதவ சதாசிவராவ் கோல்வல்கரும்
1925ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பகுத்தறிவாளரும் சமூகச் சீர்திருத்தவாதியுமான பெரியார் ஈ.வெ.ரா. சுயமரியாதை இயக்கத்தைத் தமிழ்நாட்டில் தோற்றுவித்த ஆண்டு இது. இந்தியாவில் சமத்துவ சமுதாயம் அமைந்திட தாஷ்கண்ட்டில் (முன்னாள் சோவியத் யூனியன்) தொடங்கப்பட்ட இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (1920) கான்பூரில் முதல் மாநாடு நடத்தி முறையாகக் கட்சிப் பொதுச் செயலாளரையும் இதர பொறுப்பாளர்களையும் தேர்ந்தெடுத்த ஆண்டும் இதுவே. பெரும் நிலவுடைமையாளர்களும் ஜமீன்தார்களும் ஆதிக்கம் செலுத்தும் இந்து மகாசபை, காங்கிரசுக்கும் முஸ்லிம்களுக்கும் ஆதரவாகச் செயல்படுகிறது எனக் குற்றம் சாட்டி, குறுகிய இந்து தேசியவாதிகளால் தொடங்கப்பட்ட ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) உருவானதும் இந்த ஆண்டில
