எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ளவே கூச்சமாக இருக்கிறது
புகைப்படங்கள்: ஜவஹர் .ஜி (நாகர்கோவில்)
எழுத்து சார்ந்த எந்தப் பின்புலமும் இல்லாமல், கிட்டத்தட்ட நாற்பது வயதில் தற்செயலாக எழுத்தை நோக்கி வந்தவர் ஜோ டி குருஸ். கடலோர மக்களின் வாழ்க்கையை உயிர்த் துடிப்போடும் கலாபூர்வமாகவும் பதிவுசெய்யும் நாவல்களை எழுதியவர். ‘கொற்கை’ நாவலுக்காகச் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். தமிழகத்தின் தென்கோடியில் கடலோடிக் குடும்பத்தில் பிறந்த இவர் கல்வியின் மூலமாக வளர்ந்து பெருநிறுவனங்களில் பெரிய பதவிகளை வகித்தவர், வகித்துவருபவர். வசதி வாய்ப்புகள் வந்த பிறகும் வேர்களை மறக்காதவர். சொந்த ஊர், அங்கு இருக்கும் மக்கள், தொழில் ஆகியவற்றுடன் நெருக்கமான பிணைப்புக் கொண்டவர். கடலோர மக்களின் இன்னல்களைப் போக்கப் பன்முகத் தளங்களில் செயலாற்றிவருபவர். சென்னை அண்ணாநகரில் அவ
