சாயுங்காலம்

ஓவியம்: மணிவண்ணன்
காரைச் செலுத்தியபடி சேதுராமன் பக்கத்திலிருந்த ஷேர்லியைப் பார்த்துச் சொன்னான்.
“இன்னும் கொஞ்சத் தூரம்தான். பத்து நிமிஷங்களில் போய்விடலாம்.”
இரண்டு பக்கமும் களப்பு நிலம். கிழக்குப் புறம் வெண்மணல் திட்டுக்கு அருகே கடல். சீரான இடைவெளிகளுடன் வெண்ணிறத் தூண்களைக் கொண்ட பாலம் தென்பட்டவுடனேயே போக வேண்டிய ஊர் நெருங்கிவிட்டதை அறிந்து கொண்டான்.
பாலம் முடிந்ததும் ஏராளமான கல்லறைகளைக் கொண்ட மயானம். பேய்களில் நம்பிக்கையில்லாதவரையும் சற்றுத் துரிதமாகக் கடக்கச் செய்துவிடும். அவ்வளவு கல்லறைகளும் கண்கள் முளைத்து உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல பிரமை தொற்றிவிடும். அதைத் தாண்டியதும், அண்ணாந்து பார்க்கவைக்கும் உயரத்தில் ஒரு பிள்ளையார் சிலை. ஊருக்குள் நுழைபவர்களைப் பார்வையால் எடை
