எல்லோர் கைகளிலும் கறை
கரூர் பெருந்துயரம் நடந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையிலும் தமிழக அரசியல் களத்திலும் ஊடகங்களிலும் பொது வெளியிலும் அதுவே முக்கியப் பேசுபொருளாக இருக்கிறது. அந்த நிகழ்ச்சி ஏற்படுத்திய அதிர்ச்சியும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு களங்களில் அது ஏற்படுத்திவரும் தாக்கமும் அத்தகையவை.
கடந்த ஆண்டு அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் இந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் கட்சியின் கூட்டத்தை நடத்தினார். பெருமளவு மக்கள் திரண்ட இந்நிகழ்வில் ஏற்பட்ட கடும் நெரிசலில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் எனப் பொதுமக்கள் 41 பேர் உயிரிழந்தார்கள். சர்வதேச ஊடகங்களிலும் இது முக்கியச் செய்தியானது.
இந்தத் துயரத்தின் உண்மைக் காரணங்களைக் கண்டறிந்து குற்றமிழைத்தவர்களைச் சட்டத்தின் முன்பும் மக்களின் முன்பும் நிறுத்த வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு. முழுக்க முழுக்க மனிதர்கள் செய்த தவறுகளால் நிகழும் இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதில் அரசு, காவல்துறை, கூட்டங்களைக் கூட்டும் அமைப்புகள், ஊடகங்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பொறுப்பு உள்ளது. இந்தப் பொறுப்பை உணர்ந்து இந்தத் து
