தலையங்கம்
ஆசிரியர் குழு

கரூர் பெருந்துயரம் நடந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையிலும் தமிழக அரசியல் களத்திலும் ஊடகங்களிலும் பொது வெளியிலும் அதுவே முக்கியப் பேசுபொருளாக இருக்கிறது. அந்த நிகழ்ச்சி ஏற்படுத்திய அதிர்ச்சியும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு களங்களில் அது ஏற்படுத்திவரும் தாக்கமும் அத்தகையவை. கடந்த ஆண்டு அரசிய

திரை: பைசன்
ஸ்டாலின் ராஜாங்கம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் பைசன் என்ற காளமாடன். 1990களில் தூத்துக்குடி வட்டாரத்தில் கதை நடக்கிறது. பால்ய வயதிலிருந்தே கபடிமீது ஆர்வம் கொண்டவனாக வளரும் கிட்டான் என்ற இளைஞன் அப்பகுதியில் நிலவிவரும் ஓயாத சாதிக் குழு மோதல்களுக்கு ஊடாகப் போராடி விளையாட்டில் உயர்ந்த இடத்தை அடை

நோபல் பரிசு: இலக்கியம்
எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி

லாஸ்லோ கிராஸ்னஹோர்கெ இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கும் முன்னரே எப்போதும்போல் வெற்றி பெறுபவர் குறித்துப் பந்தய ஆர்வலர்கள் பல முன்னணி எழுத்தாளர்களைப் பட்டியலிட்டிருந்தார்கள். இந்திய எழுத்தாளர் அமிதாவ் கோஷ், ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஜெரல்ட் முய்ர்னான் ஆகியோருடன் கனேடியப் பெண் எழுத

நோபல் பரிசு: வேதியியல்
விஜயகுமார்

ஒரு கால்பந்து மைதானத்திற்கு நிகரான பரப்பளவு கொண்ட பொருளை உள்ளங்கையில் ஏந்திக்கொள்ள முடியுமா? அதன் எடை ஓரிரு கிராமுக்குள் இருக்குமா? அதன் பரப்பில் அப்பொருளைவிடப் பல மடங்கு எடை கொண்ட பொருள்களை வைத்திருக்க இயலுமா? அல்லது அந்தப் பொருளுக்கே தனக்குள் எதை எடுத்துக்கொள்ள வேண்டும், எதை விலக்க வேண்டும் என

அஞ்சலி: எஸ்.எல். பைரப்பா (1931&2025)
பாவண்ணன்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கர்நாடகத்தின் பல பகுதிகளில் பிளேக் நோய் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கியது. ஓராண்டுக் கால நீண்ட தீவிர மருத்துவச் சிகிச்சையின் விளைவாக ஒரு வழியாக பிளேக் தடுக்கப்பட்டது. எனினும் நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் பிளேக் நோய் மீண்டும் பரவத் தொடங்கிக் கிராமங்களிலும்

அஞ்சலி: ஜேன் குடால் (1934&-2025)
செல்வகுமாரன்

உலகப்புகழ் பெற்ற புரட்சிகரமான விலங்கியலாளர், சூழல் பாதுகாப்பியலாளர் சேன் குடால் (Dame Jane Goodall) 2025, அட்டோபர், 1 அன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இலாசு ஏஞ்சலசு நகரில் தன் 91ஆம் அகவையில் இயற்கை எய்தினார். மாந்தர்களுக்கு மிக நெருக்கமான உயிரினமான சிம்பன்சி பற்றிய அவரது 60 ஆண்டுக்கால ஆய்

அஞ்சலி: ரமேஷ் பிரேதன் (1964&2025)
சித்ரன்

படம்: புதுவை இளவேனில் 2007ஆம் ஆண்டாக இருக்கக்கூடும். பாண்டிச்சேரி அல்லயன்ஸ் ஃப்ரான்சைஸில் குறும்படங்கள், ஆவணப் படங்கள் திரையிடல் நிகழ்வு. சேகுவேராவைப் பற்றிய ஆவணப்படம் முடிந்ததும் சற்றுப் பருமனான ஒருவர் உணர்ச்சி ததும்பப் படம் குறித்துப் பேசத் தொடங்கினார். பேச்சின் நடுவே பிரபாகரனை ஈழத்துச் சேக

கதை
களந்தை பீர்முகம்மது

ஓவியம்: மணிவண்ணன் ஊரில் அன்று எல்லோருமே சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டி ருந்தார்கள். நீண்ட நாட்களுக்குப் பின் ஊர்க்காரர்கள் ஒட்டுமொத்தமாகச் சிரிக்கிறார்கள். வயிறு குலுங்கக் குலுங்கச் சிரித்த அந்தச் சிரிப்பின் ஓசை வானில் எவ்வியதுபோல இருந்தது. கரீம் நல்ல மனிதன். அவன் ஐஸா பாத்திமாவை நிக்கா

கட்டுரை
கா.அ. மணிக்குமார்

வினாயக தாமோதர சாவர்க்கரும் மாதவ சதாசிவராவ் கோல்வல்கரும் 1925ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பகுத்தறிவாளரும் சமூகச் சீர்திருத்தவாதியுமான பெரியார் ஈ.வெ.ரா. சுயமரியாதை இயக்கத்தைத் தமிழ்நாட்டில் தோற்றுவித்த ஆண்டு இது. இந்தியாவில் சமத்துவ சமுதாயம் அமைந்திட தாஷ்கண்ட்டில் (முன்னாள்

நேர்காணல்: ஜோ டி குருஸ்
சந்திப்பு: அரவிந்தன்

புகைப்படங்கள்: ஜவஹர் .ஜி (நாகர்கோவில்) எழுத்து சார்ந்த எந்தப் பின்புலமும் இல்லாமல், கிட்டத்தட்ட நாற்பது வயதில் தற்செயலாக எழுத்தை நோக்கி வந்தவர் ஜோ டி குருஸ். கடலோர மக்களின் வாழ்க்கையை உயிர்த் துடிப்போடும் கலாபூர்வமாகவும் பதிவுசெய்யும் நாவல்களை எழுதியவர். ‘கொற்கை’ நாவலுக்காகச் சாகி

கற்றனைத்தூறும்-12
சாரா அருளரசி

அண்மையில் கல்வித் துறையிலுள்ள ஆசிரியர்கள் செய்த போராட்டங்களைப் பட்டியலிட்டால், டெட் தேர்வுக்கு எதிராக அரசுப்பள்ளி ஆசிரியர் போராட்டம், பகுதிநேர ஆசிரியர் பணி நிரந்தரம் கோரிப் போராட்டம், இடைநிலை ஆசிரியர் ஊதிய ஏற்றத்தாழ்வினை நீக்கக்கோரிப் போராட்டம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரிப் போர

பதிவு: இயல் விருது 2024
கிருஷ்ண செல்வன்

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ‘இயல் விருது’ தொடங்கி இந்த ஆண்டுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது இருவருக்கும், நூல்களுக்கான விருதுகள் மூவருக்கும் வழங்கப்பட்டன. கனடா, டொரண்டோவில் அக்டோபர் 4 அன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவின் முக்கிய அம்சங்கள் பற்ற

கட்டுரை
விவேக் ராதாகிருஷ்ணன்

“எதை நினைக்க வேண்டும்?”, “எதைப் பேச வேண்டும்?”, “எதைச் செய்ய வேண்டும்”, “எப்படி வாழ வேண்டும்” – இதுபோன்ற கேள்விகளைத் தினசரி நிகழ்வுகளிலும், இக்கட்டான தருணங்களிலும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். இக்கேள்விகளுக்கெல்லாம் வேரான ஒரு மூலக் கேள்வி: &ld

கதை
உமா வரதராஜன்

ஓவியம்: மணிவண்ணன் காரைச் செலுத்தியபடி சேதுராமன் பக்கத்திலிருந்த ஷேர்லியைப் பார்த்துச் சொன்னான். “இன்னும் கொஞ்சத் தூரம்தான். பத்து நிமிஷங்களில் போய்விடலாம்.” இரண்டு பக்கமும் களப்பு நிலம். கிழக்குப் புறம் வெண்மணல் திட்டுக்கு அருகே கடல். சீரான இடைவெளிகளுடன் வெண்ணிறத் தூண்களைக்

பாரதியியல்
ய. மணிகண்டன்

  ஔவையார், காக்கைபாடினியார், காரைக்காலம்மையார், திலகவதியார், மங்கையர்க்கரசியார் முதலிய ‘ஆர்’ விகுதி பெற்ற பெண் ஆளுமையர் பெயர்களைத் தமிழ் வரலாறு கண்டதுண்டு. ‘சரஸ்வதி’ என்னும் பெண்பாற் பெயர் ‘ஆர்’ விகுதி பெற்ற வடிவம் அரிதான வழக்காகவே காட்சிதருகிறது. ஆயினும்

உரை
துஷி ஞானப்பிரகாசம்

கறுப்பு ஜூலையின் 25ஆம் ஆண்டு நினைவுகூரலின் பொருட்டு, 2008ஆம் ஆண்டிலே கனேடியத் தமிழர் பேரவை பன்முகப்பட்ட நிகழ்வுகளை ரொரன்ரோவின் பல பாகங்களிலும் ஒழுங்கு செய்திருந்தது. அதன் ஒரு அங்கமாக சேரனின் ‘வான் பொய்த்தால்’ ‘What if the Rain Fails’ என்ற ஆங்கில நாடகம் பல காட்சிகளாக ரொரன்

கடிதங்கள்

அக்டோபர் இதழில் ‘அறப்பணிக்கு டெட் தேர்வா?’ என்ற சாரா அருளரசியின் பத்தியைப் படித்தேன். ஆசிரியர்கள் மீது இவ்வளவு கோபமா? தான் ஓர் ஆசிரியராக இருந்தும் களத்தில் என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்பதை அவர் தனது கவனத்தில் கொள்ளவில்லை என்பதைக் கவலையுடன் நோக்குகிறேன். ஆசிரியர்களைப் பற்றித் தான் கூறு

உரை
கோ. ஒளிவண்ணன்

ஷாலினி பிரியதர்ஷினி, கோ. ஒளிவண்ணன், ஜி. குப்புசாமி, மருதன், மு. வேடியப்பன் சென்ற நூற்றாண்டில் உலகத்தை உலுக்கிய படைப்புகளில் ஒன்று இன்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ‘தீரமிகு புது உலகம்’ (Brave New World). இந்தப் புத்தகம் உலகத்தை உலுக்கியதன் காரணம் மிக எளிமையானது: எதிர்காலம் குறி

உள்ளடக்கம்