வன்முறையின் விளையாட்டு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் பைசன் என்ற காளமாடன். 1990களில் தூத்துக்குடி வட்டாரத்தில் கதை நடக்கிறது. பால்ய வயதிலிருந்தே கபடிமீது ஆர்வம் கொண்டவனாக வளரும் கிட்டான் என்ற இளைஞன் அப்பகுதியில் நிலவிவரும் ஓயாத சாதிக் குழு மோதல்களுக்கு ஊடாகப் போராடி விளையாட்டில் உயர்ந்த இடத்தை அடைகிறான் என்பது கதை.
தன்னுடைய படங்கள் வெளிவருவதற்கு முன்பும் பின்பும் அவற்றின் கதைகள் பற்றித் தொடர்ந்து பேசிவந்திருக்கிறார் மாரி செல்வராஜ். அதன்படி அவருடைய படங்களின் கதைகள் அவர் அனுபவித்தவை, பார்த்தவை. மொத்தமாகச் சொல்ல வேண்டுமானால் இக்கதைகள் தன்வரலாற்றுத் தன்மை கொண்டவை. அவருடைய அனுபவத்திலிருந்து பிரிக்க முடியாதவை. அவர் படம் இயக்குவதற்கு முன்பு எழுதி வெளியிட்ட ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் பின்பு ஆனந்த விகடனில் எழுதிய ‘மறக்கவே நினைக்கிறேன்’, ‘சம்படி ஆட்டம்’ போன்ற தொடர்களும் அத்தன்மையிலானவையே. 1990களில் தென் மாவட்டங்களிலிருந்து உருவாகிவந்திருக்கும் எந்த இளைஞருக்கும், கு
