அழிவுக்குக் கட்டியம் கூறும் எழுத்து

லாஸ்லோ கிராஸ்னஹோர்கெ
இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கும் முன்னரே எப்போதும்போல் வெற்றி பெறுபவர் குறித்துப் பந்தய ஆர்வலர்கள் பல முன்னணி எழுத்தாளர்களைப் பட்டியலிட்டிருந்தார்கள். இந்திய எழுத்தாளர் அமிதாவ் கோஷ், ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஜெரல்ட் முய்ர்னான் ஆகியோருடன் கனேடியப் பெண் எழுத்தாளர் கிரிஸ்டினா ரிவெரா கார்ஸா, சீனப்பெண் எழுத்தாளர் கான் சியூ ஆகியோர் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்கள். ஆனால் பெண் எழுத்தாளர்களையும் சேர்த்துப் பட்டியலிட்டவர்கள் 2018 ஆண்டு நோபல் அமைப்பில் நிகழ்ந்த ஓர் ஊழல் காரணமாக அவ்வமைப்பில் எழுதப்படாத விதி ஒன்று வகுக்கப்பட்டிருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. கடந்த சில ஆண்டுகளாக ஆண் எழுத்தாளர், பெண் எழுத்தாளர் என்று மாறி மாறித்தான் இலக்கியத்துக்க
