சற்றே சாய்வாக இருக்கிறது மேற்கு

ஓவியம்: மணிவண்ணன்
ஊரில் அன்று எல்லோருமே சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டி ருந்தார்கள். நீண்ட நாட்களுக்குப் பின் ஊர்க்காரர்கள் ஒட்டுமொத்தமாகச் சிரிக்கிறார்கள். வயிறு குலுங்கக் குலுங்கச் சிரித்த அந்தச் சிரிப்பின் ஓசை வானில் எவ்வியதுபோல இருந்தது.
கரீம் நல்ல மனிதன். அவன் ஐஸா பாத்திமாவை நிக்காஹ் செய்திருந்தான். இருவருமே சொந்தக்காரர்கள்; ஆனால் முறை மாப்பிள்ளை, முறைப்பெண் என நேர்வரிசைத் திருமணமாக அது இருக்கவில்லை. தாத்தாவும் தங்கையுமாகச் சம்பந்தம் கலந்துகொண்டார்கள். தாத்தாவும் தங்கையும் எப்படிச் சம்பந்தம் கலக்க முடியுமென்று கேட்டால், அவர்கள் இருவரின் மாப்பிள்ளைமார்களும் வேறுவேறு ஆட்கள்தானே? ஆண் ரத்தம்தானே உறவைத் தீர்மானிக்க முடியும்? அப்படியாகச் சம்பந்தக்காரர்கள் ஆகிவிட்டார்கள்.
ஐஸா பாத்திமாவைத் தக்கூறு என்றுதான்
