தன்னாட்சியே சுதந்திரம் காண்ட்டின் பகுத்தறிவுவாத அறம்

“எதை நினைக்க வேண்டும்?”, “எதைப் பேச வேண்டும்?”, “எதைச் செய்ய வேண்டும்”, “எப்படி வாழ வேண்டும்” – இதுபோன்ற கேள்விகளைத் தினசரி நிகழ்வுகளிலும், இக்கட்டான தருணங்களிலும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். இக்கேள்விகளுக்கெல்லாம் வேரான ஒரு மூலக் கேள்வி: “அறம் என்றால் என்ன?” இது, மனித அறத்தின் அடிப்படையைப் பற்றிய கேள்வி; அறம் நம்மீது வைக்கும் நிபந்தனைகளின் சாத்தியத்தைப் பற்றிய கேள்வி. இந்த அடிப்படைக் கேள்வியை முதன்மையானதாகக் கருதியவர்களுள் ஒருவர், தன் எழுத்துகளால் தத்துவ உலகைப் புரட்டிப்போட்ட ஜெர்மானியத் தத்துவவியலாளரான இம்மானுவேல் காண்ட் (Immanuel Kant). இவர், அறிவாற்றலின் சிகரமான காரணத்திறனை அடிப்படையாகக் கொண்ட பகுத்தறிவாத அறவியல் கோட்பாட்டை (rationalist ethical theory) உருவாக்கி
