ஆற்றுவார் மேற்றே பொறை
அண்மையில் கல்வித் துறையிலுள்ள ஆசிரியர்கள் செய்த போராட்டங்களைப் பட்டியலிட்டால், டெட் தேர்வுக்கு எதிராக அரசுப்பள்ளி ஆசிரியர் போராட்டம், பகுதிநேர ஆசிரியர் பணி நிரந்தரம் கோரிப் போராட்டம், இடைநிலை ஆசிரியர் ஊதிய ஏற்றத்தாழ்வினை நீக்கக்கோரிப் போராட்டம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரிப் போராட்டம் ஆகியவை நினைவிலெழுகிறது. இவற்றுக்குத் தகுந்த தீர்வு கிடைத்ததாகத் தெரியவில்லை; போராட்டம் தொடர்ந்து நடைபெறவுமில்லை; இந்தப் போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவும் இல்லை. சொல்லப்போனால் ஆசிரியர் சமூகமேகூட, ஒரு படிநிலையிலுள்ளோர் மற்றவருக்கு உதவிக்கரம் நீட்டிக்கொள்ளவில்லை. இத்தனைக்கும் ஒவ்வொரு ஆசிரியர் நிலைக்கும் ஏகப்பட்ட சங்கங்கள் உண்டு; அதற்குள் பல்வேறு பிரிவினைகளும் உண்டு, சாதி உட்பட.
ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வருவதற்கான போட்டியில் ஏராளமான வாக்குறுதிகளைக் கொடுக்கின்றன. மக்களுக்குக் கொடுக்கப்படுபவை, பெரும்பாலும் காற்றோடு போகும். ஆனால் அரசு ஊழியர்களுக்குக் கொடுப்பவை, அப்படியன்று; சந்தர்ப்பம் அமையும்போதெல்லாம் அவர்கள் அதனை ஆட்சியாளரிடம் நினைவூட்டிக்கொண்டே இருப்பர்; அதில் சில நி
