ராமனைத் தடுமாறவைக்கும் மனிதக் கடவுள்கள்
தென்னிந்தியாவைச் சேர்ந்த எனக்கு வடஇந்தியக் கோயில் சிலைகள் அந்நியமாகவே இருந்திருக்கின்றன. அவை தென்னிந்தியக் கோயில்களின் சிலைகள் போல் இல்லை. கோயில்களுமே தன்னளவில் வடிவமைப்பிலும் பரப்பளவிலும் சடங்குகளிலும் மக்களின் கலாச்சாரத்திலும் வேறுபட்ட அனுபவத்தைத் தருகின்றன; சிலைகளும் முற்றிலும் அவ்வாறே உள்ளன. தென்னிந்தியக் கோயில்களில் உள்ள கறுப்புச் சிலைகளுக்குப் பதிலாக இங்குப் பெரும்பாலான சிலைகள் வெண்மையாக இருக்கின்றன. மேலும் அவை சிறியதாகவும் வித்தியாசமான முகத்தோற்றம் கொண்டதாகவும் உள்ளன; பெயர்கள்கூட மாறுகின்றன. வடக்கில் ராம் – க்ருஷ்ண என்றால் தெற்கில் ராமா (ராமர்) – கிருஷ்ணா. தெற்கில் கிருஷ்ணா என்றால் ஆண் கடவுளாகவும் வடக்கில் பெண் பெயராகவும் இருக்கிறது. தெற்கிலிருந்து வடக்கிற்குச் செல்லும் கண நேரத்தில் பாலினமே மாறுகிறது.
இந்தியாவெங்கும் கிருஷ்ணருக்குப் பல கோயில்கள் இருக்கின்றன. அதுபோலவே ஹனுமருக்கும்