ருகுன் அத்வானி - எனது எடிட்டர்
ஒளிப்படம்: அனுராதா ராய்
வரலாற்றாய்வாளர், எழுத்தாளர் ராமச்சந்திர குஹாவின் புதிய புத்தகம் ‘புத்தகச் சமையல்’ (The Cooking of Books) இரண்டு வகையில் குறிப்பிடத்தகுந்தது. முதலாவது ஓர் எழுத்தாளர் தன்னுடைய எடிட்டரைப் பற்றிய நினைவுகளை எழுதியிருக்கிறார்; இது மிகவும் அரிது. இரண்டாவது, இந்திய மொழி எழுத்தாளர்களிடையே எடிட்டிங் என்பது வேண்டாத செயல் என்ற கருத்து நிலவுகிறது. குஹாவின் இந்த நூல் ஒரு படைப்பின் செம்மையாக்கத்தில் எடிட்டரின் பங்கு என்ன, எதற்கு என்பவற்றை எடுத்துக் காட்டுகிறது.
மலையாள நாளிதழ் மாத்ருபூமி திருவனந்தபுரத்தில் நடத்திய இலக்கிய விழாவில் பங்கேற்க வந்திருந்த ராமச்சந்திர குஹாவை நேர்கண்ட