தலையங்கம்

  இந்திய விமானநிலைய ஆணையமும் ஸ்பிக் மக்கே அமைப்பும் இணைந்து கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தன. தில்லி நேரு பூங்காவில் நவம்பர் 17 அன்று நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சியை ஒத்திவைப்பதாக அமைப்பாளர்கள் திடீர் அறிவிப்பைச் செய்தனர். சில வெளி முகவர்களின் வற்புறுத்தல் காரணமாகவே ந

தலையங்கம்
சேரன்

  இலங்கை நாடாளுமன்றத்தில் சென்ற சில வாரங்களாக இடம்பெற்றிருந்த வன்முறைகளுக்கு இலங்கையின் சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளும் அவற்றின் தலைமைத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மைத்திரிபால சிறிசேன (அதிபர்), மகிந்த ராஜபக்ச (எதிர்ப்புக் கூட்டணியின் தலைவர்) ஆகியோர் பொறுப்பு. (மிளகாய்த்தூள் இலங்கைய

கடிதங்கள்

ஆயர் ஃபிராங்கோவின் ஆன்மீக ஃபிராடுத்தனம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தங்களது வாழ்வை ஏசுவுக்கே அர்ப்பணித்துத் தியாகக் கோலம் கொண்டுள்ள கன்னியாஸ்திரிகளைப் பாலியல் வன்புணர்வு செய்து தங்களின் மதத்தை இழிவுபடுத்திய ஆயருக்கு அனுசரணையாகவே மேலிடம் நடந்துகொண்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தீவிரப் போராட்டத்திற்க

EPW பக்கங்கள்
க. திருநாவுக்கரசு

  பிரிவு 7-ஐ அரசு பயன்படுத்தியிருப்பது அரசியல் முகமை விஷயத்தில் நவீன தாராளவாத முகாம் பிளவு கண்டிருப்பதைக் காட்டுகிறது. தன்னாட்சியுடன் இயங்குவது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கும் அரசுக்கும் இடையில் நடக்கும் பலப்பரீட்சை இந்த நாட்டில் அசாதாரணமான விஷயமல்ல. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சட்டம்,

EPW பக்கங்கள்
க. திருநாவுக்கரசு

  எந்தச் சமூகம் பாலின நீதி விழுமியத்தை உள்வாங்குவதில் தோல்வியடைகிறதோ அது சுயமரியாதையற்ற சமூகம். சபரிமலைக் கோயிலுக்குள் பெண்கள் செல்வது குறித்துச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு ஆதரவாளர்களும் இருக்கிறார்கள், எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். ஒருபுறம் காங்கிரஸ் கட்சியின் முரண்ப

கட்டுரை
பழ. அதியமான்

  காரணம் கேட்கும் கால வெற்றியின் அடையாளம் சபரிமலையில் பெண்கள் (10 - 50 வயது) வழிபடலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் 28 செப்டம்பர் 2018இன் தீர்ப்பு. காரணம் தேவையில்லை; நம்பிக்கை போதுமானது என்ற பழைய வழக்கத்தின் நீட்சி நான்கில் ஒருவரின் ஏற்றுக்கொள்ளா குறிப்பு. அவர் பெண் என்பதும் ஆச்சரியமில்லை. கேரளத்

அஞ்சலி - ந. முத்துசாமி (1936 -2018)
கே.எஸ். கருணா பிரசாத்

  நவீன நாடக முன்னோடிகளில் ஒருவரான தஞ்சாவூர் புஞ்சையிலிருந்து தன்னைப் பெயர்த்தெடுத்து சென்னையில் பதியமிட்டுக் கொண்டார். ந. முத்துசாமியின் பேச்சும் மூச்சும் தமிழ் இலக்கியச் செயல்பாடு என்று தொடங்கி, தமிழ் மரபுக் கலையான தெருக்கூத்தின் அறிமுகம் கிடைத்தபிறகு அரங்கச் செயல்பாடாகப் புஞ்சையிலிருந்து பு

அஞ்சலி - வே. பாபு ( 1974- 2018)
குணா கந்தசாமி

  ”அஞ்சலிக் குறிப்பு எழுத வச்சிடாத.” உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது குறித்த ஏதோவொரு பேச்சினிடையே விளையாட்டான எச்சரிக்கையாகவும் ஒன்றைச் சொல்லிவிட்டால் அது நிகழாது என்ற பிரத்யேக முன்னூகத்தின் அடிப்படையிலும் அந்த வார்த்தை களைச் சொன்னேன். “நீ எழுதாம வேற யார் எழுதுவா?&r

மதிப்புரை
இசை

காஹா சத்தசஈ (பிராகிருத மொழிக் கவிதைகள்) மொழியாக்கம்: சுந்தர்காளி, பரிமளம் சுந்தர் வெளியீடு:  அன்னம் மனை எண் &1 40, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 307 பக். 96 ரூ.100   காஹா சத்தசஈ மகாராஷ்ட்ர பிராகிருத மொழியில் எழுதப்பட்ட எழுநூறு காதல் பாடல்களைக் கொண்ட நூல். இது கி.பி. 200க்கும்

மதிப்புரை
லேகா

நிழல்கள் (சினிமா கட்டுரைகள்) அ. யேசுராசா வெளியீடு:  அலை இலக்கம் 1 ஓடைகரை வீதி, குறுநகர், யாழ்பாணம் பக். 100 ரூ.300 “சினிமாவை விமர்சிக்கும் எவரும், அதில் சொல்லப்பட்டிருப்பதை காட்டிலும் அதிகப்படியாக எதையும் நமக்குத் தெரிவிக்க முடியாது. அதற்கு அவர்கள் தீவிர முயற்சி எடுத்துக்கொண்ட

கட்டுரை
கே.ட்டி. இரவிவாணன்

  அனைத்து வயதுப் பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும் தீர்ப்பை அமுல்படுத்த முனைப்புக் காட்டும் கேரள இடது முன்னணி அரசைக் கண்டித்தும் போராட்டம் வலுக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று ஐயப்பனைத் தரிசிக்கப் புறப்படும் பெண்கள் நடையிலேயே விரட்டியடிக்கப்

கவிதைகள்
கீதா சுகுமாரன்

என்ன சொல்வாய் பலரும் பலமுறை பழகிய பாதைதான் இருளும் ஒளியும் கடக்க இயலாத தகிப்பில் வெதும்பிய  முத்த நிலக்காட்சிகளும் நமக்குப் பழகியவைதான்.   வெள்ளிகள் நிறைந்த அந்த வானும் பாழடைந்த பாலமும் படிக்கட்டுகளில் கனன்றுகொண்டிருக்கும் வெப்பமூச்சுகளும்  அதனடியில் கசட்டுநீரில் மங்கலாகவே

அஞ்சலி - ந. முத்துசாமி (1936 -2018)
சண்முகராஜா

  ந. முத்துசாமி தஞ்சாவூர் மாவட்டம் புஞ்சை கிராமத்தில் 1936ஆம் ஆண்டு பிறந்தார். 1968இல் நடை இதழில் வெளியான ‘காலம் காலமாக’ அவரது முதல் நாடகப்படைப்பு. நாற்காலிக்காரர், சுவரொட்டிகள், நற்றுணையப்பன், இங்கிலாந்து உட்பட இருபதிற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். இங்கிலாந்து, அப்பாவும்

அஞ்சலி - ந. முத்துசாமி (1936 -2018)
பிரளயன்

  ந. முத்துசாமியின் மறைவு, தமிழ் நாடக வுலகில் மிகப்பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது; உண்மையிலேயே அவரது மறைவு தமிழ் நாடகவுலகிற்கு மிகப்பெரும் இழப்பு என்றெல்லாம் சொல்வது வெறுமனே சம்பிரதாயமான சொற்பிரயோகங்கள்தான். ஏனெனில் தமிழ் நாடகவுலகில் ந. முத்துசாமியின் ‘இருப்பு’ எவ்வாற

கதை
ஜான்சுந்தர்

  பூனை சந்துக்கு திடீரென்று ஒரு களை வந்து விட்டது. சந்து என்றால் நாங்கள் குடியிருக்கிற சந்து அல்ல. சந்தின் சந்து. எங்கள் வரிசை வீடுகளின் கட்டட முடிவுக்கும் அடுத்த கட்டடச் சுவருக்கும் இடையிலான, அதிகம் யாரும் புழங்காத சந்து. இரண்டாவது வீட்டுக்காரர் அவரது மீசையை வெயில்பட பார்த்து வெட்டவும், உள்

கவிதைகள்
தாணு பிச்சையா

  வீடு  அடையா வெளி   முட்டுக் கொடுத்து நிலை நிறுத்தப்பட்ட வாசற்காலுக்கான புதியவீடு வரைபடமாகவே இருந்தது   செம்பரிதியும்  நிறைமதியும் தம்கால்கள் பதித்துச் செல்லவொரு சுற்றுக்கட்டுத் தாழ்வாரமும் வேனில்வெப்பம்  கார்காலத் தண்மம்யென பொழுதுகளின் நற்கொடைகள் தடையின்

கட்டுரை
அ.கா. பெருமாள்

  கேரளம் பாலக்காடு மாவட்டம் சித்தூரில் ஓடும் சோகநாசினி நதியின் ஒருபுறம் பிரம்மாண்டமான அரசு கலைக் கல்லூரி உள்ளது. அங்கேதான் நானும் ராஜமார்த்தாண்டனும் படித்தோம். சோகநாசினி ஆற்றின் அக்கரையில் சிறிய கிராமம் உண்டு; அதற்குச் செல்ல ஒத்தையடிப் பாலமும் உண்டு. நானும் ராஜமார்த்தாண்டனும் அந்தக் கிராமத்தி

கட்டுரை
பெருமாள்முருகன்

  உ.வே. சாமிநாதையருக்குப் பிறர் எழுதிய கடிதங்களின் முதல் தொகுதி (உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம், தொகுதி 1, 1877-1900) ஆ.இரா. வேங்கடாசலபதி பதிப்பித்து வெளிவந்துள்ளது. எண்பத்தேழு ஆண்டுகள் வாழ்ந்த உ.வே. சாமிநாதையர் தமக்கு வந்த கடிதங்களைப் பாதுகாத்து வைத்திருந்தார். வாய்மொழித் தகவல்களுக்கு இருக

எம்.எஸ்: முதலாமாண்டு நினைவு அஞ்சலி
எம். திவ்யா

  தாத்தா... என உச்சரித்து ஓராண்டாகிவிட்டது.  என்னை மறந்து தாத்தா என அழைக்கும் போதெல்லாம் இதயம் துடிதுடித்து விடுகிறது. ஆம், இதயத்திற்கு மட்டுமே தெரியும்; என் அன்புத் தாத்தாவின் நினைவுகளை அது பொக்கிஷமாய்ச் சுமந்துகொண்டிருக்கிறது.  எம்.எஸ். என எல்லோராலும் அழைக்கப்பட்ட எம். சிவசுப்பிரம

கவிதைகள்
ஸர்மிளா ஸெய்யித்

  எய்தற் கரியது   காய்ந்து முற்றிய பஞ்சுக்  காயென   வெடித்துச் சிதறுகின்றன சொற்கள்  எடுத்து வரவும்   விட்டுச் செல்லவும் முடியாத  அவற்றை அடைகாப்பதில்   தொலைகிறது  ஒரு  கனவு    விழிப்பும் உறக்கமும்  சொற்களுடனே.   

கட்டுரை
பெருந்தேவி

  பரியேறும் பெருமாள் திரைப்படக் கதையாடலில் முன்வைக்கப்பட்டிருக்கிற அழுத்தமான வாதம் இதுதான்: “பொதுச் சமூகம் என்கிற பேரில் வலம் வரும் ஆதிக்கச் சாதிக் குழுக்களின் ‘ஆண்மை’ பற்றிய சொல்லாடலில் பங்கேற்க நாங்கள் மறுக்கிறோம்.” இந்த வாதத்தைக் கருத்துத் தெளிவோடு மட்டுமல்லாமல் திர

உள்ளடக்கம்