வீடு அடையா வெளி, புகைவண்டியின் கணப்பயணம்
வீடு அடையா வெளி
முட்டுக் கொடுத்து
நிலை நிறுத்தப்பட்ட
வாசற்காலுக்கான புதியவீடு
வரைபடமாகவே இருந்தது
செம்பரிதியும் நிறைமதியும்
தம்கால்கள் பதித்துச் செல்லவொரு
சுற்றுக்கட்டுத் தாழ்வாரமும்
வேனில்வெப்பம்
கார்காலத் தண்மம்யென
பொழுதுகளின் நற்கொடைகள்
தடையின்றிப் புகுந்துவர
தனித்தனிச் சாளரங்களும்
வீட்டின் முதல் விருப்பம்
தவழ் பருவத்தினரின்
சரும நலனில் சிரத்தை கொண்டு
மென் தளத்தை வேண்டுகிறது
கீழ்த்தரைகள்
கட்டியெழுப்பப்படாத
சுவர்களும் கோருகின்றன
கற்களனைத்தும் துளைக்கப்பட்டாலும்
ஆட்டம் காணாத
உத்திரம