தீராக் கனல்
ஓவியம்: மணிவண்ணன்
மரணம் புதிதல்ல. பிறந்தவர் எல்லோருக்கும் சம்பவிப்பதுதான். யாரும் விதிவிலக்கானவர்களாக இருக்க முடியாது. எல்லோருக்கும் தெரியும். எங்கே எப்படி என்பதுதான் ஆளாளுக்கு மாறும்.
நாம் காதலித்து மணந்துகொள்ளவில்லை தான். அதற்காகத் தாஜ்மகாலைப் பார்க்கக் கூடாது என்று சட்டமில்லையே. மேலும் கட்டிக்கொண்ட பின்பு இருவரும் ஆசையாசையாகத்தான் காதலித்தோம். உன்மேல் அப்படிப் பித்துகொள்வதற்காகத்தான் நான் யாரையும் காதலிக்கவில்லை போலும். எதற்கேனும் சண்டைபோட்டோ கோபித்துக்கொண்டோ பிணங்கியதாக நினைவில்லை. எல்லாவற்றையும் அனுசரித்தவள் நீ. உலகம் வியக்கும் காதல் மாளிகையின் முன்னால் அமர்ந்து நாமும் படமெடுத்துக்கொள்ள வேண்டாமா? என்றுதானே ஆக்ராவுக்குப்போனோம். தில்லியைச் சுற்றிப் பார்க்கச் சுற்றுலாவின் கடை