மாயச் சுண்ண வரைகோல்
ஓவியம்: ரோஹிணி மணி
நகரின் விளிம்பிலிருந்த அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் கழிவறைக்கு அடுத்து, ஒழுகும் கூரையும் ஈரக்கசிவும் சமைத்த நாற்றமும் தேங்கிக் கிடக்கும் ஓர் அறையில் ஆர்கான் என்னும் பெயர் கொண்ட ஏழை ஓவியன் வசித்து வந்தான்.
ஒன்பது சதுர அடிப்பரப்பே கொண்ட அந்தச் சிறிய அறை பெரிய அறையாகத் தோற்றமளிக்கக் காரணம், அந்த அறையில் சுவரை ஒட்டிக்கிடக்கும் ஒரேயொரு நாற்காலியைத் தவிர வேறு எதுவும் கிடையாது. அவனது மேசை, நிலையறைப் பெட்டிகள், வண்ணப்பூச்சுப் பெட்டிகள், ஓவியம் வரையப் பயன்படுத்தும் நிலைச்சட்டம் உள்பட, உணவுக்காக விற்கப்பட்டுவிட்டன. இப்போது எஞ்சியிருப்பது ஆர்கானும் அவனது நாற்காலியும் மட்டுமே. ஆனால் இன்னும் எவ்வளவு காலம் இருக்க முடியும்?
இரவுச் சாப்பாட்டு வேளை நெருங்கியது. “எவ்வளவு மோப்ப உணர்வு