அது ஓர் இருண்ட காலம்
ராகவ ராஜ்
1975ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலை என்ற சர்வாதிகாரம் குறித்துப் பேசும்போது அதற்கு முந்தைய பல நிகழ்வுகளைப் பார்க்க வேண்டியுள்ளது.
பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, 1964, மே 27ஆம் தேதி மரணம் அடைந்தார். அவருக்குப் பிறகு லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகிறார். அவர் பிரதமரானதில் அப்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த காமராஜருக்கு முக்கியப் பங்கு இருந்தது.
லால் பகதூர் சாஸ்திரி 1966இல் மரணம் அடைகிறார். 1965ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போர் மூண்டது. இரு நாடுகளுக்குமிடையே சமரசப் பேச்சுவார்த்தை நடத்த சோவியத் யூனியனின் தாஷ்கண்ட் நகருக்குச் சென்றபோது எதிர்பாராத வகையில் மரணம் அடைந்தார். இதையடுத்து நாட்டின் அடுத்த பிரதமராக யாரைத் தேர்வுசெய்வது என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்சினைகள் தலைதூக்க