கடைசியாக
Sethu Cook Art Project: Pradeep Chandra siri, (Srilanka)
கடைசியாக
கத்திக்குத்
தெரியும்
கைப்பிடியை
இரக்கமின்றி
பற்றத் தவறும்
ஒருவன்
கூர்முனைக்கு
தவிர்க்காமல்
தனது இதயத்தை
திறந்து காட்டித்தான்
தீர வேண்டும்
•••
கூர்மை
உருவப்பட்ட
சிறிய கத்திக்கு எதிராக
இன்னொரு பெரிய வாளை
ஓங்குபவன் பலவீனன்.
மாற்றாரின் படைகளால்
முற்றுகையிடப்பட முடியாத
முழுவதும் பாதுகாப்பான
கோட்டைக்குள் உறங்கும்
அரசன் தனது கனவினின்றும்
அர்த்த ராத்திரியில் திடுக்கிட்டு
விழிப்பதென்னவோ
அவையினர்