நினைவுச் சிலை
ஓவியம்: செல்வம்
பின்னாலுள்ள தோல் தொழிற்சாலை பிரம்மாண்டமானது. எதிரில் உயர்ந்த சுற்றுச்சுவர் மறைத்திருக்கும். பெரும் இரும்பு வாயிற்கதவுகள் மூடியிருக்கும். பக்கவாட்டுக் கதவு வழியாக முருகேசன் வெளியே வந்தான். சாலையில் வாகனங்கள் ஓயாமல் ஓடிக்கொண்டிருந்தன. வேலை நேரமில்லாத தொழிலாளர்கள் போய்வந்துகொண்டிருந்தார்கள். இருபுறமும் தோல் தொழிற்சாலைகளும் தொடர்புள்ள கட்டடங்களும் நின்றிருந்தன. அவனுக்கு எங்கு போவதெனத் தெரியவில்லை. மீண்டும் காலையில் வீட்டுக்குத் திரும்ப விரும்பவில்லை. அது வீட்டிலுள்ளோரிடம் சந்தேகத்தை எழுப்பும். எதிர்காலம் பற்றி மனைவிக்குப் பயம் வரும். மூலைத் தேநீர்க்கடையில் வெறுமையாக உட்கார முடியாது. தொழிற்சாலை வெளிச்சுவரின் சிறிய நிழலில் காத்திருக்கவும் மனமில்லை. மற்ற தொழிலாளிகள் துக்கம்