நெருக்கடி நிலை 50ஆம் ஆண்டு
ஆத்மாநாம் கவிதை
அவசரம்
அந்த நகரத்தில்
இருவர் கூடினால் கூட்டம்
நால்வர் கூடினால் பொதுக்கூட்டம்
சாலையில் கூட்டமாய்ச் செல்லக் கூடாது
வீட்டுக்குள் யாரும் நடக்கலாம்
ஒவ்வொரு வீடும்
தார்ச்சாலையால் இணைக்கப்பட்டிருக்கும்
மறைவிடங்கள் அங்கில்லை
குளிப்பவர்கள் கூட்டங்கூட்டமாய்க்
குளிக்க வேண்டும்
தண்ணீர் கிடைக்கும் நள்ளிரவில் மட்டும்
சிகரெட் பிடிக்கவும் அங்கு தடை
ஆஷ்ட்ரேயை அதிகாரி பார்த்தால்
அவரை நகரத்தின் சகாராவுக்கு அனுப்புவார்
அங்கே ஏற்கெனவே உள்ளவரோடு சேர்ந்து
அதனைப் பசுமையாக்க வேண்டும்
நகரத்தில் தள்ளிப்போடாத அவசரம்
உள்நாட்டு மனத் தெளிவு
நகரத்தின் மக்களுக்குக் கிடைக்கும் ஒரே டானிக்
கடுமையான உழைப்பு
பத்திரிகைகளில் விளம்பரங்கள் இல்லை
அதை வாங்கு இதை வாங்கு என்று
மலிவாக ஏராளமாகக் கிடைத்தது
நகரத் தலைவரின் பொன்மொழிகள்
எல்லோரும் அவரைப் புகழ்ந்தார்கள்
மந்திரிகள்