தூய்மைக் கலை
மாணவியர்க்குத் தனிக் கழிப்பறை வசதி வேண்டும் என்று சொல்வோர், மாணவர்க்கும் அவ்வசதி செய்துதரப்பட வேண்டுமென்பதில் சற்று அசட்டையாகவே இருக்கிறார்கள். ஒரு பள்ளியில் மாணவியர்க்கு மட்டும் இரண்டு கழிப்பறைகள் இருந்தன. மாணவர்கள் இடைவேளை நேரத்தில் வெளியில் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வருவார்கள். வெளியில் சென்ற எல்லா மாணவர்களும் திரும்பவும் உள்ளே வருவார்களா என்பது நிச்சயமில்லை. பின்னர், தலைமையாசிரியரின் தொடர் முயற்சியால் அப்பள்ளியில் மாணவர்களுக்கும் புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டு இச்சிக்கல் தீர்ந்தது.
ஒரு பள்ளியில் கழிப்பறையில் தண்ணீர் போகாமல் அடைத்துக்கொண்டிருந்ததைத் தூய்மைப் பணியாளர் சரிசெய்ய முயல்கையில் அதில் மாணவிகள் நாப்கின்களைப் போட்டிருந்ததைச் சொல்லி ஓர் ஆசிரியர் வருத்தப்பட்டார். மற்றொரு பள்ளியில், அடைப்பை நீக்க முயன்ற பணியாளர் சற்றே மெதுவாகக் கைகளை விட்டதால் தப்பித்தார். காரணம், அதில் கண்ணாடி