தமிழகத்தில் இடஒதுக்கீடு கிரீமிலேயர்முறை ஏன் தேவை?
தமிழகத்தில் சமூகநீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்ட 69% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 30 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20 சதவீதமும், எஸ்.சி. பிரிவினருக்கு 19 சதவீதமும், எஸ்.டி. பிரிவினருக்கு 1 சதவீதமும் அடங்கும். இதில் பி.சி., எம்.பி.சி. பிரிவினருக்கு கிரீமிலேயர் (Creamy Layer - பொருளாதாரத்தில் மேம்பட்ட பிரிவு) முறை தேவையா என்பது குறித்த விவாதம் பரவலாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள சமூகச் சூழலும், திராவிட இயக்க அரசியல் கோட்பாடுகளும் இப்பிரிவை எதிர்த்து வருகின்றன.
பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதார, சமூக வாய்ப்பு பெற்றவர்கள் அல்லது கிரீமிலேயர் என்பது இந்தியாவில் கல்வியும் செல்வ வளமும்மிக்க பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும். அதன்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானத்திற்கு மேலுள்ள பிற்படுத்தப்பட்டவர்கள், மத்திய அரசாங்கத்தின் கல்வி, இதர தொழில்முறைச் சலுகைகளைப் பெறத் தகுதி பெற மாட்டார்கள்.
‘பிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினர், பொருளாதார சமூக வாய்ப்பு பெ
