இறந்த எட்டே மாதங்களில் பாரதியின் வழிநின்ற ‘தமிழ் உலகு’
1922 ஏப்ரல் 26ஆம் நாள். பாரதி இறந்து ஏழு மாதங்களே ஆகியிருந்தன. எட்டாம் மாதம் நடந்துகொண்டிருந்தது. பாரதியைப் போற்றி அவர் வழியில் நடக்கத் தொடங்கிவிட்டது தமிழ் உலகு.
இந்தத் தமிழ் உலகு தொல்காப்பியப் பாயிரத்திலே பனம்பாரனார் குறிப்பிட்ட ஒட்டுமொத்தத் தமிழ் உலகு அன்று. ஆயினும் அத்தமிழ்கூறு நல்லுலகின் குறிப்பிடத்தக்க இதழியற் பிரதிநிதி. தமிழ் உலகு என்னும் பெயரில் நடைபெறத் தொடங்கிய வார இதழாகும் இது.
இதன் ஆசிரியர் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தமிழ் உலகு இதழின் ஆசிரியர் எஸ். பட்டாபிராமனின் முகமென்ன, முகவரியென்ன என்பதைத் தெரிந்தவர்கள் சிலரேனும் இன்று இருக்கின்றனரா என்பதுகூடத் தெரியவில்லை. ஆனால் இதழ் சென்னை மயிலாப்பூரிலிருந்து வெளிவந்தது மட்டும் தெரிகிறது. இதழைப் பாராட்டி அறிமுகம் செய்த தமிழின் முதல் நாளிதழாகிய சுதேசமித்திரன், “அதன் ஆசிரியராகிய ஸ்ரீமான் எஸ். பட்டாபிராமன் ஆங்கிலம் கற்று எம்.ஏ. பட்டம் பெற்றிருப்பதுடன், தமிழ்மொழியில் தேர்ச்சி பெற்றவர்; உலக வியவகாரங்களையும் நவீன சாஸ்திரங்களையும் பல வகைச் சரித்திரங்களையும் தமிழர் அறிந்து
