இரண்டு பாடல்கள், இரண்டு தேசியக் கருத்துருக்கள்

அபனீந்தரநாத் தாகூரின் ‘பாரத மாதா’ ஓவியம்
நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் ‘ஜனகணமன’, ‘வந்தே மாதரம்’ ஆகிய இரண்டு பாடல்களுக்குப் பெரும் பங்கு இருந்தது. இவை இரண்டும் விடுதலைப் போராட்டப் பாடல்களாகவோ, தேசிய கீதங்களாகவோ இயற்றப்பட்டவை அல்ல. இருப்பினும், வெறும் பாடல்கள் என்ற நிலையிலிருந்து இந்திய தேசியத்தைப் பற்றிய மாறுபட்ட கண்ணோட்டங்களைத் தாங்கிய கருத்துருப் படங்களாக மாறின. தேசியவாதம் குறித்த விவாதங்களும் மோதல்களும் இந்தப் பாடல்களின் வரலாற்று வாழ்விலும் குடிபுகுந்தன. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த விவாதங்களுக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கும் பிறகு, 1950 ஜனவரி 24 அன்று நடைபெற்ற அரசியல் நிர்ணய சபையின் இறுதிக் கூட்டத்தில், அவற்றில் ஒன்று இந்தியாவின் தேசிய கீதமாகவும், மற
