மோடிக்குப் பயம் காட்டிய கரப்பான்பூச்சிகள்

எந்தத் தீப்பொறி காட்டுத்தீயாக மாறும் என்பதை ஒருபோதும் கணிக்க முடியாது. அரசியல் போராட்டங்களையும் இயக்கங்களையும் பொறுத்தவரை எது மாபெரும் சக்தியாக உருவெடுக்கும், வெற்றிக்கு இட்டுச்செல்லும் என்பது பல்வேறு வெளிப்புறக் காரணிகளைப் பொறுத்தது; ஒருபோதும் கணிக்க முடியாதது.
மே 15ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.(தனக்கு மூத்த வழக்கறிஞர் தகுதி வழங்கும் வழக்கை தில்லி உயர்நீதிமன்றம் விரைவாக நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது; எனினும், வழக்குத் துரிதமாக நடைபெறாததால், மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி அவர் இந்த வழக்கைத் தொடுத்திருந்தார்.)
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், வழக்கறிஞரைக் கண்டித்தார். அப்போது “அமைப்பிற்கு எதிராகச் சமூக வலைதளங்களில் ஏராளமானவர்கள் எழுதி வருவதை நாங்கள் அறிவோம்.
