மரிக்கொழுந்து

Courtesy: Bandu Manamperi, Sri Lanka
1
மரிக்கொழுந்து
வாசிப்பின் அடையாளமாய்,
அன்று நான் தந்தது
ஒரு வெள்ளை இறகு.
ஆனால், அந்த இறகைவிடவும் ஏதோ ஒரு மென்னுணர்வின் சிலிர்ப்பு...
உன்னிடம் எதைப் பரிமாறிக் கொள்ளும்போதும்
ஏற்படுகிறது.
இயற்கையின் கைவண்ணத்துடன் வழுவழுப்பாயிருக்கும் சிப்பியை
தாள் எடையாய் தந்தேன் உனக்கு
பகிர்ந்த அந்த நொடியில்
உருவானது ஏதோ ஒன்று.
என் நினைவில் ஆழமாய் அழுந்தியதுபோல...
இப்படியே...
எதையாவது கொடுத்து வாங்கிக்கொள்ளவே
மனம் ஏங்குகிறது.
தளிர் பச்சை மரிக்கொழுந்தை
உன்னிடம் நீட்டிய அந்த நொடி...
அதன் வாசம் இருவருக்குள்ளும் கரைந்தது.
அத
