‘யார் கையையும் எதிர்பாக்காம வாழ்ந்திருவேன்’

ஓவியம்: மு. மகேஷ்
பிறைச்சந்திரன் வடிவில் இருந்த மேஜைக்குப் பின்னே கமலி மேடம் நடுவிலும் நானும் பேச்சியும் இடது வலதாக அமர்ந்திருந்தோம். முக்கியமான வேலைகளை எங்கள் மூவருக்கும் தனித்தனியாகவோ கூட்டாகவோ தருவது எங்கள் ஆட்சியரின் வழக்கம். மாவட்டத்துக்குப் பல திட்டங்களின் கீழ் வரப்பெறும் தையல் மெஷின்களை ஒருங்கே தகுதியான நபர்களுக்குத் தருவதற்காக ஒரு நேர்காணல் குழுவை அமைத்து எங்களை நியமித்திருந்தார். கமலி மேடத்தின் அறையிலேயே தேர்ந்தெடுக்கும் வேலையை முடிக்கலாம் என்று நாங்கள் முடிவு செய்ததால் இப்போது இங்கே அமர்ந்திருக்கிறோம். ஒரு நேர்காணல் அறையைப் போலத்தான் இப்போது இந்த அமைப்பு இருக்கிறதா என்று எனக்குத் தோன்றியது. அறைக்கு ஹாப் ஒயிட் கலர் மிகவும் பாந்தமாகப் பொருந்தியிருந்தது; அதேபோல அடர் பச்சைத் திரைச்சீலையும்.
<p
