போக விரும்பாத ஊருக்குப் போடப்பட்டிருக்கும் பாதை
கட்டுரை
போக விரும்பாத ஊருக்குப் போடப்பட்டிருக்கும் பாதை
பி.ஏ. கிருஷ்ணன்
அரசியல் வியாபாரம்
தேசிய கல்விக் கொள்கையின் வரைவு வந்ததும் தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் எடுத்த நிலைப்பாடு இந்தியை வைத்து அரசியல் வியாபாரம் செய்வதில் அவை குறியாக இருப்பதைத் தெளிவாகக் காட்டியது. மும்மொழிக் கொள்கை புதிதல்ல. 1948-49இல் இருந்தே மத்திய அரசின் கொள்கை அதுவாகத்தான் இருக்கிறது. 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பின்பும் 1968இல் நாடாளுமன்றத்தில் மும்மொழித் திட்டத்தை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நம் அரசியல் சட்டமும் இந்தி அலுவல்மொழியாக இருக்கும் என்று சொல்கிறது. தமிழ்நாடு போன்ற மா