ஸிடீஎன் / √5 ஆர் x க = ரபெ
கதை
ஸிடீஎன் / √5 ஆர் x க = ரபெ
தி. ஜானகிராமன்
ஓவியங்கள்: நடனம்
“நமஸ்காரம், டாக்டர் கோஸ்வாமி!”
“நமஸ்காரம். டாக்டர் என்று சொல்லத் தேவையில்லை. வெறுமே கோஸ்வாமி என்று சொன்னாப் போதும்.”
“ஏன் அயல் நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று உங்கள் தகுதியை ஆராய்ந்து கொடுத்திருக்கிற பட்டமாச்சே அது!”
“என்ன பிரயோசனம்? என் திட்டம் இப்படிச் சந்தி சிரிக்க ஆரம்பித்துவிட்ட பிறகு பட்டமும் பிருதும் எதற்கு?”
“என்ன சந்தி சிரித்துவிட்டது இப்போது? உங்கள் அரிய திட்டம் ஏன் வெற்றி பெறவில்லை. ஆறு கோடி ரூபாய் செலவழித்தும் ஏன் வெற்ற