புள்ளிக்குப் பதிலாக வட்டம்
கதை
புள்ளிக்குப் பதிலாக வட்டம்
கார்த்திக் பாலசுப்ரமணியன்
ஓவியங்கள்: செல்வம்
மா மரக் கட்டையில் செய்த அறையின் கதவுகள் அதிக சிரமம் தரவில்லை. இழுத்து ஓங்கி அடித்ததில் தாழ்ப்பாளைப் பிணைத்திருந்த அதன் திருகாணிகள் கழன்றுகொண்டன. அப்பாவின் வேட்டியைக் கயிறாகத் திரித்துச் சுருக்கிட்டுத் தொங்கிக்கொண்டிருந்தான். எதிரே இருந்த புகைப்படத்தில் அவன் அப்பா கம்பீரமாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தார். அப்புகைப்படம் மாட்டப்பட்ட சுவரை ஒட்டிப் போடப்பட்டிருந்த மேசையின் மேலே, மருந்துப்புட்டியின் கீழே படபடத்த மருத்துவப் பரிந்துரைச்சீட்டின் ரீங்காரம் அறையின் அமைதியைக் குலைத்தது. அதனருகே ஒரு டயரியும் அதில் சில குறிப்புக