ஈழச் சிற்றிதழ்களும் நவீன இலக்கியமும்
ஈழத்தில் இலக்கியச் சிறுபத்திரிகை மரபின் தோற்றுவாய் எது? 1915இல் தமிழ்மகள், 1927இல் மாதர்மதிமாலிகை போன்ற இதழ்கள் வெளியாயின. அவை பெண் விடுதலையை, அறிவியல் உரையாடல்களைப் வெளியிடும் முற்போக்கு இதழ்களாக இருந்தனவே தவிர நவீன இலக்கிய உரையாடல்களைச் செய்யவில்லை. இதேபோல 1933இல் ஞாயிறு இதழ் யாழ்ப்பாணக் கலாநிலைய வெளியீடாக வந்தது. இலக்கியம், தத்துவம், பௌதிகம், ஓவியம், நாகரிகம், சரிதம், கலை சார்ந்த பல்வேறு ஆக்கங்களை இவ்விதழ் வெளியிட்டது. எனினும் நவீன இலக்கியம் சார்ந்த உரையாடல்களுக்குள் இவ்விதழை மதிப்பிட இயலாது. 1930இல் ஸ்தாபிக்கப்பட்ட ஈழகேசரி பத்திரிகை, இலக்கியத்திற்குக் கணிசமான இடம் கொடுத்தது. ஆனால் ஈழகேசரியில் மரபிலக்கியத்திற்கே முன்னுரிமை தரப்பட்டது. அதற்குச் சங்க இலக்கியம் மீதான ஈடுபாடே அதிகம் இருந்ததால், நவீன இலக்கிய ஆர்வம் கொண்டவர்களுக்கு ஈழகேசரியின் போக்கு, ஏமாற்றத்தை அளித்தது. அவர்கள் ஈழத்தில் நவீன இலக்கியத்திற்கான வெளியை ஏற்படுத்த முயன்றனர்.
அப்போது தீவிரமாக இயங்கிய எழுத்தாளர்களான செ. முருகானந்தன், நாவற்குழியூர் நடராசன் போன்றவர்கள்
