தாய்மாமன் சீர்: உரிமையா? சுரண்டலா?
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட’த்தைப் பாலினக் கண்ணோட்டத்துடன் பரிசீலிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. குடிமக்கள் நல்வாழ்வில் அரசின் பங்கு என்னவாக இருக்கிறது? அது என்னவாக இருக்க வேண்டும்? என்ற கேள்வியையும் இத்திட்டம் எழுப்புகிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாத்து, அவற்றைச் செயல்படுத்தி மக்கள் நலன் பேணுவதை விடுத்து ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடாக, கொடை கொடுத்து மக்கள் நலனைப் பாதுகாக்க முயல்வதைத்தான் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ என்ற பெயரும் விவரணையும் நமக்கு உணர்த்துகிறது. மக்கள் நலனையும் முன்னேற்றத்தையும் கவனத்தில்கொண்டு பல வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவந்த பெருமை தமிழ்நாட்டிற்கு எப்போதும் உண்டு. அவ்வகையில் நாட்டின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் இருக்கிறது. பள்ளிகளில் பத்தாம் வகுப்புவரை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டமாகத் தொடங்கி பின் காலை உணவு வழங்கும் திட்டமாக விரிவடைந்து, உணவில் தினமும் ஒரு முட்டை
