சிவில் உரிமைப் போராளிகள்


நான் பெரும்பாலும் தனித்து இயங்குபவன். முன்னாள் மாணவர் சங்கங்களிலும் வாட்ஸ்அப் குழுக்களிலும் சேர்வதைத் தவிர்த்து வந்திருக்கிறேன். ‘என்னை உறுப்பினராக ஏற்றுக்கொள்ளும் எந்த அமைப்பிலும் சேர மாட்டேன்’ எனும் குரூச்சோ மார்க்ஸின் மனநிலைதான் என்னுடையதும். ஆனால் 1980களில் டெல்லியில் மக்கள் ஜனநாயக உரிமைகளுக்கான ஒன்றியத்துடன் (PUDR) சில ஆண்டுகள் இணைந்திருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்திய அரசு இந்தியக் குடிமக்களுக்கு எதிராக இழைத்த பல்வேறு குற்றங்களை ஆராய்ந்து அவற்றுக்கு அரசையே பொறுப்பேற்கக் கோரும் குடிமக்கள் இயக்கம் இது. திரிவேணி கலா சங்கத்தில் சனிக்கிழமைகளில் நடைபெற்ற பியூடிஆர் கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். எனக்கு அன்று கிடைத்த உதவித்தொகையிலிருந்து மிகச
