அக்டோபர்
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
அக்டோபர்
    • கட்டுரை
      மகளிர் நலத்திட்டங்கள்: தாய்மாமன் சீர்சுமந்து வாராரு...
      தாய்மாமன் சீர்: உரிமையா? சுரண்டலா?
      அரவிந்தன்: மூன்றாயிரத்தின் கதைஞன்
      சினிமாவில் தெய்வங்களும் படிநிலைகளும்
      மெய்வருத்தம் பாராத கலகக்காரர்
    • அஞ்சலி: க்ளோரியா ஸ்டெய்னம் (1934 - 2026)
      பெண்ணியம் இயக்கமல்ல, வாழ்வு
    • கதை
      வால்
    • பத்தி இன்றும் என்றும் 6
      சிவில் உரிமைப் போராளிகள்
    • பாரதியியல்
      பாரதியும் பாரத மாதாவும்
    • பதிவு: காலச்சுவடு 30 - 300
      வாசிப்பை விரிவுபடுத்திய காலச்சுவடு
    • அஞ்சலி: சாலமன் பாப்பையா (1936 - 2026)
      உயிர்த்தெழ விரும்பாத கிறித்துவர்
    • பதிவு
      புக் பிரம்மா: தென்மொழிகளின் திருவிழா
      வ.அய்.சு. நூற்றாண்டு: திராவிடவியல் ஆய்வுகளின் தூண்டுகோல்
    • தொடர் 80+
      அம்பை சுமந்த பெட்டி
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      மொழிக் கருத்தியல் வரையறுக்கும் அகராதி
    • சிற்றிதழ்கள்: ஈழம் & புலம்பெயர்
      ஈழச் சிற்றிதழ்களும் நவீன இலக்கியமும்
    • மதிப்புரை
      காலமும் சாபமும் அலைக்கழிக்கும் மனிதர்கள்
    • கவிதைகள்
      சம்யுக்தா மாயா கவிதைகள்
    • தலையங்கம்
      முடக்கப்படும் வளாகங்கள்
    • நினைவஞ்சலி: எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி (1942-2026)
      தேர்ந்த வாசகரை இழந்த நூல்கள்
    • கவிதை
      அந்த ஒற்றைக் கண்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு அக்டோபர் கடிதங்கள் கடிதங்கள்

கடிதங்கள்

கடிதங்கள்

காலச்சுவடு செப்டம்பர் 2026 இதழில் ‘தவெக அரசின் 100 நாள்கள்’ தலையங்கம் நேர்மையாகவும் நடுநிலையோடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூற்றவும் இல்லை, தூக்கிப் பிடிக்கவும் இல்லை. தனது செயல்பாடுகளைப் பொறுத்து அக்கட்சி நீடித்திருக்கும்.

ஜி. ஜவஹரின் ‘வன்கெட்டு’ கடலோரக் கிறிஸ்தவக் கிராமத்தைப் பற்றிய மிகச் சிறப்பான கதை. கிறிஸ்தவ மதத்தினரின் நுணுக்கமான சாதி மேலாதிக்க நடைமுறைகள் அருமையாக விவரிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல கிறிஸ்தவக் கிராமங்களில் சாமி சிலைகளைச் சப்பரத்தில் வைப்பதுமுதல் கல்லறை உரிமைகள் வரை பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதை விரட்டுவதற்குச் சாட்டையோடு மீட்பர் இன்னும் வரவில்லை. கதையில் நிறைய பரதவர் வழக்குச் சொற்கள் கையாளப்பட்டுள்ளன. ஒவ்வொரு வழக்குச் சொல்லுக்கும் பொருளை அடைப்புக்குறிக்குள் அல்லது  அதே பக்கத்தின் கீழ் அடிப்பகுதியில் கொடுத்திருந்தால் வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் நன்றாக இருந்திருக்கும். பக்கம் 37இல் ‘செடிக்குத்தம்’ பொருள் குறிக்கப்படவில்லை.

வி. சகாயராஜா
திண்டுக்கல்

***

‘தவெகவின் நூறு நாள்கள்’ தலையங்கம் படித்தேன்.

ஆட்சியாளர்கள் மக்களின் சேவகர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களுக்குச் சேவைசெய்ய வருபவர்கள் பரந்த மனப்பான்மையுடன் நாட்டு மக்களின் தேவை அறிந்து செயல்படுவது நல்லது. சுற்றுச்சூழல் சார்ந்து இயற்கை வளங்கள் பாதிக்கப்படாமல் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் கவனம் செலுத்துவது இன்னும் சிறப்பாக இருக்கும். கல்வி, சுகாதாரம், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கடந்த காலங்களில் கட்டமைக்கப்பட்டவற்றை இன்னும் மேம்படுத்திப் புதிய திட்டங்களை ஏற்படுத்தலாம். ஆளும்கட்சி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மாநிலத்தின் வளர்ச்சியை மக்களின் நலன் உள்ளிட்டவற்றை முன்னிறுத்திச் செயல்பட வேண்டும்.

மக்களின் நம்பிக்கையைப் புதிய அரசு காப்பாற்றுமா என்பதை வருகின்ற காலகட்டங்களில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வைத்து மக்கள் முடிவு செய்வார்கள்.

கூத்தப்பாடி மா. பழனி
தருமபுரி

***

இடஒதுக்கீடு என்பதற்கு ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ என்பதே சரியான சொல்லாக இருக்கும். பெரும்பாலும் சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகே அதன் முழுமையான சாதகபாதகங்களை அறிந்துகொள்ள முடியும். அவ்வகையில் பிரதிநிதித்துவப் பிரச்சினையை அனுபவ அறிவின் வழி எடுத்துரைத்துத் தீர்வையும் தந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இன்றைய செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மக்களின் பொருளாதார நிலையை அரசாங்கங்கள் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

அதன்படி தரவரிசைப் பட்டியலையும் வெளியிடலாம். அரசாங்கங்கள் இதனை நடைமுறைப்படுத்தினால் உண்மையான பிரதிநிதித்துவமற்றவர்கள் முழுவதும் பயன்பெறுவார்கள். அரசாங்கத்தின் காதுகளுக்கு இவ்விசயம் எட்டுமா, அப்படி எட்டினாலும் இதற்குச் செவிசாய்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

அஞ்சலிக் கட்டுரைகளின் வழி பல்வேறு ஆளுமைகளைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பை காலச்சுவடு ஒவ்வொரு இதழும் வழங்குகிறது. அவ்வகையில் ‘வைகறை’ என்ற மனிதரைத் தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி. ஆனால் போகிற போக்கில் ‘தமிழ் படித்து வீணாகிப் போனார்’ என்று எழுதியது ஏனென்று தெரியவில்லை. வந்தே மாதரம் பாடலை முன்னிலைப்படுத்துவதற்குப் பின்னாலுள்ள அரசியலைத் தெளிவாக எடுத்துரைத்த மலையாளக் கட்டுரையை மொழிபெயர்த்து வெளியிட்ட காலச்சுவடுக்கு நன்றிகள்.

சி. சு. ஜெகன்நாதன்
பெங்களூரு

***

இளைஞர்களைக் கரப்பான் பூச்சி என்று தலைமை நீதிபதி வர்ணித்ததற்கு அமெரிக்கா வாழ் அபிஜித் தீப்கே கொதித்தது ஏன்? இவரால் மட்டும் மாபெரும் கூட்டத்தை அமெரிக்காவிலிருந்தே திடீரெனத் திரட்ட முடிந்தது எப்படி? இது இளைஞர்களின் எழுச்சி என்றால் புஸ்வானம்போலப் பொசுக்கென உடனே அடங்கியது ஏன்?

தலைமை நீதிபதியின் கருத்து தவறென்றால் வழக்குத் தொடுத்து வருத்தம் தெரிவிக்கக் கோருவதே அறிவுடைமை. அதை விடுத்துக் கரப்பான் பூச்சிகள் சம்பந்தமே இல்லாமல் மோடி எதிர்ப்பு, நீட் ஆதரவு, இஸ்லாமிய - பாகிஸ்தானிய ஆதரவுக் கோஷங்கள் என்று தடம் மாறியது ஏன்? தர்மேந்திர பிரதான் ராஜினாமா மட்டும்தான் இவர்கள் நோக்கமா? விவசாயிகள் போராட்டத்தையே சமாளித்த மோடி அரசு கரப்பான் பூச்சிகளுக்குப் பயந்ததாக நம்புவது பகடியாகும்.

க. திருநாவுக்கரசு கட்டுரையை முடிக்கும்போது, கஜக அடுத்து என்ன வடிவம் எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம் என்கிறார்; கஜக மாறுவேஷம் போடலாமே தவிர, வளராது.

அண்ணா அன்பழகன்
அந்தணப்பேட்டை

***

ச. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு, எந்தத் திசைநோக்கிச் செல்கிறது என்றும், அரசின் நேர் / எதிர்ச் செயல்பாடுகள் பற்றியும் சரியாகவே தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானோரை ‘புனிதராக்கும்’ செயல் எந்த எல்லைவரை போகும் என்பதை மக்கள் கவனித்துக்கொண்டுதான் உள்ளார்கள்.‘தேஜ்பால் வழக்கிற்குப் பிறகு: ஒரு பெண்ணியவாதியின் திறந்த மடல்’ ஆணாதிக்கச் சிந்தனாவாதிகளின் முகமூடியைக் கிழித்துள்ளது. “பாலியல் குற்றவாளி என்று அழையுங்கள்” என முடித்திருந்தது சரியான சவுக்கடி. கரப்பான் பூச்சிகள் கட்டுரை பொந்திலிருந்த அக்னிகுஞ்சாக வெளிப்பட்டது. “மெகலோமேனியாக்” மிகவும் சரியாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, சபாஷ்! ‘முஸ்லிம்களும் இடஒதுக்கீடும்: ஒரு வரலாற்றுப் பார்வை’, பல்வேறு தகவல்களை வாசகர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளது. சாதீயம் தீயினும் கொடியது. கிறிஸ்துவ சமயத்தில் அந்தத் தீ எப்படி ஊடுருவி உள்ளது என்பதை ‘வன்கெட்டு’ சிறுகதை புரிய வைக்கிறது. பாரதியின் சிறப்புகளை வாசகர்களுக்குத் தொடர்ந்து அளிக்கும்  ய. மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள்.

சீனி. மணி
பூந்தோட்டம்

***

காலச்சுவடு செப்டம்பர் இதழில் கே.ஆர். அதியமான் எழுதிய ‘கிரீமிலேயர் ஏன் தேவை?’ என்ற கட்டுரையில் ‘சட்டநாதன் கமிஷன்’ ‘சதானந்தன் கமிஷன்’ எனத் தவறாக அச்சாகியிருந்தது. தவறுக்கு வருந்துகிறோம்.

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.