பாரதியும் பாரத மாதாவும்

‘பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி’, ‘பாரத மாதா நவரத்ந மாலை’, ‘பாரத மாதா’ என்றெல்லாம் பாரத மாதாவைப் பற்றி எழுதியது மட்டுமல்ல, பாரத மாதாவிலும் எழுதியிருக்கின்றார் பாரதி என்பது இப்போது தெரியவந்துள்ளது.
ஸமரஸ போதினி என்னும் பெயரில் தஞ்சையிலிருந்து வார இதழொன்று 1920 சூன் மாதம் 16ஆம் தேதியிலிருந்து வெளிவந்திருக்கிறது.
“இஃதொரு தமிழ் வாரப் பத்திரிகை. புதன்கிழமைதோறும் தஞ்சையினின்றும் வெளிவருவது. இந்தியர்கள் பிரிட்டிஷாரைப் போல சுதந்திரமும் பூரண சுயஆட்சியும் பெற்று உலகத்தார் கண்முன்பு சுகமாகவும் தைரியமாகவும் வாழவேண்டுமென்ற நோக்கத்துடன் இப்பத்திரிகை ஆரம்பித்து நடத்தப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம் காங்கிரஸை முழுமனதுடன் ஆதரிப்பதாகும். அரசியல், கல்வி, விவசாயம், தொழில், வியாபாரம், தொழிலாளர் இயக்கம் முதலிய விஷயங்கள் இப்பத்திரிகையில் ந
